பாஜக கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ் டிடிவி தினகரன்.? பாஜகவின் அடுத்த மூவ்


தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் நிகழும் பரபரப்பான அரசியல் சூழல் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பூசலுக்கு மத்தியில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் நடந்த இந்த சந்திப்பின்போது, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி செய்ய அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தென் மாவட்டங்களில் கடந்த தேர்தலில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரின் வாக்கு சதவீதத்தை கருத்தில் கொண்டு அவர்களை மீண்டும் கூட்டணியில் சேர்க்க வேண்டும். இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து சம்மதம் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
கூட்டணி வெற்றிக்காகவும் தென் மாவட்ட வாக்குகளை தக்கவைத்துக்கொள்ளும் வகையிலும், அதிமுக உட்கட்சி விவகாரங்களில் தலையிடாமல், பிரிந்து சென்றவர்களை பாஜக கூட்டணியின் கீழ் கொண்டு வந்து கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் டிடிவி, ஓபிஎஸ் ஆகியோருக்கு தொகுதிகளை ஒதுக்க பாஜக திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை டிடிவி தினகரனை சந்தித்து பேசிய நிலையில், டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை கூட்டணியில் இணைக்க ஜெ.பி. நட்டா அறிவுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரன் இணையலாம் என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓபிஎஸ்ஸை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால் ஈபிஎஸ் தரப்பு ஏற்குமா.? என்ற கேள்விக்கு பதில் கூற மறுத்துவிட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைக்கும் முயற்சிகள் வேகமெடுத்துள்ளதாக தெரிகிறது.


banner

Related posts

விநாயகர் சிலை ஊர்வலம் – கள்ளக்குறிச்சியில் இந்து முன்னணி பொதுமக்கள் இடையே மோதல்

Ambalam News

பாமக செயல் தலைவராகிறாரா.? இராமதாஸ் மகள் காந்திமதி.. இராமதாஸ் அன்புமணி மோதல் அடுத்தது என்ன.?

Ambalam News

அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் உரிமம் புதுப்பிக்கப்படாத திரையரங்கு மீது சமூக ஆர்வலர் புகார்..

Ambalam News

Leave a Comment