ஜிஎஸ்டி வரி குறைப்பு | ஆவின் பால் பொருட்களின் விலையை குறைத்த தமிழ்நாடு அரசு


நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்து விலைகுறைப்பு செய்யப்பட்ட நிலையில், ஆவின் பாலகங்களில் பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரிக்குறைப்பை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்தி பால் பொருட்களின் விலையை குறைக்கவேண்டும் என்று பல்வேறு அரசியள்கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், ஜிஎஸ்டி வரிக்குறைப்பை அடுத்து பால் பொருட்களின் விலையை குறைத்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், பனீர், நெய் பால் பால் பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் குறைத்துள்ளது.
நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி விகிதம், 5 மற்றும் 18 சதவீதம் என இரு அடுக்குகளாக மாற்றப்பட்ட நிலையில், இந்த புதிய ஜிஎஸ்டி வரி நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதனால், பல்வேறு பொருட்களின் விலை குறைந்துள்ளது. பேக்கரி பொருட்களின் விலை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் அதன் விலை கணிசமாக குறைந்துள்ளது.
இதற்கிடையே, மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், பால் பொருட்களின் விலையை குறைத்து ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 200 கிராம் பன்னீர் 110 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 500 கிராம் பன்னீர் 275 ரூபாயாகவும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் நெய் விலை 690 ரூபாயிலிருந்து 650 ரூபாயாக குறைக்கப்பட்டிருப்பதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோல், 150 மில்லி ஆவின் UHT பால் விலை 12 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக விலை குறைந்துள்ளது. மேலும், இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


banner

Related posts

சீமான் கருத்துக்கு பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு..!

Ambalam News

தமிழக அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்

Ambalam News

சிறுமிக்கு பாலியல் தொல்லை | தாளாளர் மனைவியுடன் கைது.. தனியார் காப்பகத்தில் பகீர்..

Ambalam News

Leave a Comment