பீகாரை சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். இவர் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். பாஜக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளுக்கு அவர் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தார். அதன் காரணமாக அந்த கட்சிகள் வெற்றி பெற்றது என்று அரசியல் அரங்கில் கூறப்பட்டது.
தீவிர அரசியல் பார்வையாளர்கள், பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்ததால் தான், பாஜக, மம்தா பானர்ஜி, திமுக வெற்றி பெற்றது என்பது, ‘’காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை’’ தான் என்கின்றனர்.
இதை உறுதி படுத்தும் விதமாக, பிரசாந்த் சிஷோர், நீண்டகாலமாக பின் தங்கியுள்ள பீகாரை அரசியல் மாற்றம் மூலம் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் முயற்சியாக, மாநிலம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார். பின்னர் 2024-ல் காந்தி ஜெயந்தியன்று தனது ‘’ஜன் சுராஜ்’’ என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.
இந்நிலையில் தான், பீகார் மாநிலத்தின் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி ராம்கார், தராரி, பெலகஞ்ச் மற்றும் இமாம்கஞ்ச் ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தது.
இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. பீகாரில் புதிதாக கட்சி ஆரம்பித்து இருக்கும் பிரபல அரசியல் ஆலோசகர் மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரஜ் கட்சியும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டது.
பிற கட்சிகளை வெற்றி அடைய வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர் தனது கட்சியை நிச்சயம் வெற்றி பெற செய்வார் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தது. ஆனால் பீகாரில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. தேசிய அரசியலையும் பிற மாநில தேர்தல் வெற்றிகளையும் தீர்மானிக்க கூடியவர் என்று கூறப்பட்ட பிரசாந்த் கிஷோர் சொந்த மண்ணில், எப்படி.? படுதோல்வி அடைந்தார். அவரது தேர்தல் வியூகம் என்னவானது.?
இந்தி பேசும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்த பெரிய மாநிலமாக பீகார் இருக்கிறது. அதனாலேயே அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ளது. பீகாரில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக – ஐக்கிய ஜனதா தளத்தை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 138 இடங்களும் காங்கிரஸ் – ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை உள்ளடக்கிய i-n-d-i-a கூட்டணிக்கு 104 இடங்களும் உள்ளன; 2020 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 37%வாக்குகளையும் i-n-d-i-a கூட்டணி 23% வாக்குகளையும் பெற்றது.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக, நீண்டகாலம் ஆட்சியில் இருப்பதால் நிதிஷின் செல்வாக்கு ஆட்டம் கண்டிருக்கிறது. வேலைவாய்ப்பின்மை, புலம் பெயர்வோர் பிரச்னை, ஊழல் ஆகியவற்றால் ஆளும் கட்சி மீது அதிருப்தி நிலவுகிறது.
அதேபோல, சுஷில் மோடி கடந்த ஆண்டு மறைந்தபின் பாஜகவுக்கு வலுவான மாநிலத் தலைமை அமையவில்லை.
பிராமணரான கிஷோர் பிராமணர்கள், ராஜபுதனர்கள், பூமிஹர்கள் போன்ற முற்பட்ட சமூகங்களின் வாக்குகளை கணிசமாக ஈர்ப்பார் என்று அம்மாநில அரசியல் பார்வையாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் முற்பட்ட சமூகங்களே பாஜகவின் முதன்மை ஆதரவு தளமாகவும் வாக்கு வங்கியாகவும், உள்ளதால் அவர்கள் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு ஆதரவளிக்க வாய்ப்பில்லை. பீகாரில் 15.5% பங்கு வகிக்கும் முற்பட்ட சமூகங்களின் வாக்குகளில் ஒரு கணிசமான வாக்குகளை வேண்டுமானால் ஜன் சுராஜ் கட்சியால் பிரிக்க முடியும். இதனால் பாஜக கூட்டணிக்கு வேண்டுமானால், பாதிப்புகள் ஏற்படலாம். அரசியல் களத்தின் மொத்த முடிவுகளையும் மர்ரிவிட முடியாது.
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்புத் திருத்த நடவடிக்கைகள் மீது பெரும்பான்மையான பீகார் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வாக்கு திருட்டு நடந்திருப்பதை உணர்ந்து அவர்கள் கொந்தளிப்பின் உச்சத்தில் இருக்கின்றனர். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவை கணிசமான வாக்காளர்கள் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கின்றனர்.
இந்த நிலையில் தான், தற்போது, பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனது ஜன் சுராஜ் கட்சியுடன் களமிறங்கும் பிரசாந்த் கிஷோர், பாஜக, காங்கிரஸ் கூட்டணிகளின் வாக்குகளைப் பிரித்து அவர்களை ஆட்டம் காண வைப்பார், ஓட்டமெடுக்க வைப்பார், பீகார் அரசியல் புரட்டி போட்டு விடுவார் என்று கூறப்படுகிறது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி இந்த தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாது
ராகுல்காந்தி பாஜகவின் வாக்குதிருட்டு என்ற மோசடியை அமபலப்படுத்தி நடத்திய பேரணிகள், பீகாரில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பீகாரில் பாஜக ஆட்டம் கண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே இடைத்தேர்தலில் படுதோல்வியடைந்த, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி நூலறுந்த பட்டமாக பீகார் அரசியலை விட்டு பறந்து விடும் என்பதே நிதர்சனம்
.