எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சி பிடிக்காமல் பொறாமையுடன் வயிற்றெரிச்சலுடன் சிலர் செயல்படுவதாகவும், ‘’அவர் அங்கே சென்று விட்டார்’’ ‘’இவர் இங்கே சென்றுவிட்டார்’’ என்று பேசுகிறார்கள், அமித்ஷா எடப்பாடியார் தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறிச் சென்றுவிட்டார். அதிமுகவை தூள் தூளாக்குவோம், அவரை மாற்றுங்கள், இவரை மாற்றுங்கள் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். 8 கோடி தமிழர்களின் ஒரே பாதுகாவலர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்று மக்கள் தீர்ப்பளிபார்கள். எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியைப் பிடிக்காமல் சதி நடப்பதாகவும் ஆர்.பி.உதயகுமார் செங்கோட்டையன் மீது என்று மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை மாற்றச் சொல்பவர்களையெல்லாம் மாற்றிவிட்டு, ஈபிஎஸ் முதலமைச்சராவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதாகக் கூறி, சிலர் அதிமுகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ஒருங்கிணைப்பு என்ற பெயரில் அதிமுகவின் செல்வாக்கைக் குறைக்க முயல்வதாக ஆர்.பி.உதயகுமார் விமர்சித்திருந்த நிலையில், ஊர் ஒன்று கூடினால்தான் தேர் இழுக்க முடியும் என செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தன்னை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார் குறித்துக் காட்டமாகப் பேசினார். பின்னர் தனது பேச்சின் தவறை உணர்ந்த செங்கோட்டையன் வருத்தம் தெரிவித்து, ஆர்.பி.உதயகுமார் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
மேலும், எதற்காக அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று பேசியது குறித்தும் செங்கோட்டையன் விளக்கமளித்தார். அதில், “நீண்ட நாள் இந்த இயக்கத்தில் நான் இருக்கிறேன். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என நான் பேசியதற்கு 15 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை என்னிடம் விளக்கம் கேட்கவில்லை. எனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்துக் காலம் பதில் சொல்லும். ஊர் ஒன்று கூடினால்தான் தேர் இழுக்க முடியும். எல்லோரும் இணைந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்” என்று பேசினார்.
Related posts
Click to comment