நகராட்சி அலுவலர், காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போல.. என்னிடம் தவறாக நடந்து கொண்டார் – பெண் கவுன்சிலர் போலீசில் புகார்..



விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளநிலை உதவியாளர் முனியப்பன் என்பவரை, திமுக பெண் கவுன்சிலர் ரம்யாவின் காலில் விழ வைத்ததாக, எழுந்த புகார் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றும் முனியப்பன் என்பவருக்கும், 20-வது வார்டு கவுன்சிலர் ரம்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. தனியார் ஒப்பந்ததாரர் ஒருவர் கேட்ட கோப்புகளை எடுத்துக்கொடுக்கவில்லை இதன்காரணமாக திமுக கவுன்சிலர் ரம்யாவுக்கும் இளநிலை உதவியாளர் முனியப்பனுக்கும் மோதல் வெடித்துள்ளது. திமுக அ.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 5 கவுன்சிலர்கள் மிரட்டலால் திமுக கவுன்சிலர் ரம்யா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார் முனியப்பன். இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியில், நகராட்சி ஆணையர் அறையில் கவுன்சிலர்கள் அதிகாரிகள் திமுக கவுன்சிலர் ரம்யா ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர். அப்போது முனியப்பன் திடீரென ரம்யாவின் காலில் விழுந்து தலை மீது அடித்துக்கொண்டு அழுவது பதிவாகியுள்ளது.
இந்த சிசிடிவி காட்சி வெளியில் கசிந்த நிலையில், திமுக அ.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 5 கவுன்சிலர்கள் மீதும் “பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனியப்பனை கட்டாயப்படுத்தி காலில் விழ வைத்த தி.மு.க கவுன்சிலர் ரம்யா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று திண்டிவனம் டி.எஸ்.பி பிரகாஷ் மற்றும் நகராட்சி மேனேஜரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தமிழகத்தில் பேசுபொருளாகிய நிலையில், பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், திண்டிவனம் நகர்மன்ற தலைவரின் கணவர் ரவிச்சந்திரனை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தியிருந்தனர். இதையடுத்து, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் திண்டிவனம் போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், கவுன்சிலர் ரம்யா, நகராட்சி இளநிலை உதவியாளர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகாரளித்துள்ளார். நகராட்சி ஆணையர் அறையில் பேசிக்கொண்டிருக்கும் போது, முனியப்பன் தானாக மன்னிப்பு கேட்பதுதாக கூறி, எனது காலில் விழுவது போல் விழுந்து, அவரது இடதுகையால் என் இடுப்பின் பின்புறம் கையால் அறுவறுக்கத்தக்க வகையில் கையை வைத்து, தவறாக நடந்து கொண்டார். நான் அவரை எழுந்திருக்குமாறு கூறினேன், அங்கிருந்த மற்ற அலுவலர்களும் எழ சொல்லியும் அவர் எழ வில்லை. சுதாரித்துக்கொண்ட, நான் எனது இருக்கையை நகர்த்தி போட்டு உட்கார்ந்தேன். என்வே என்னிடம் தவறாக நடந்து கொண்ட முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். அவரது புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


banner

Related posts

மண்டல தலைவர்கள் ராஜினாமா.? முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

Ambalam News

தமிழக அரசியல் தலைவர்கள் தேர்தலுக்காக நடக்காத விஷயங்களை கூறுவார்கள்.!? விஜய் பேச்சை பெரிதுபடுத்த வேண்டியதில்லை – இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜத ஹேரத்

Ambalam News

‘’உங்களுக்காகவே குரல் கொடுக்க’’ ‘’உங்க விஜய் நா வாரேன்’’ தொடங்கியது விஜய்யின் தேர்தல் பிரச்சாரம்..

Ambalam News

Leave a Comment