ஒன்றிய அரசை கண்டித்து திருப்பூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போராட்டம்..



திருப்பூரில் ஒன்றிய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் ஆயத்த ஆடைத் துறையை பாதுகாக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருப்பூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா , மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக மேற்கு மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, காங்கிர கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி‌ தங்கபாலு, திராவிடர் கழக துணைத்தலைவர் கலி. பூங்குன்றன், , மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சுப்பராயன் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் இரா.அதியமான், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஒன்றிய அரசை கண்டித்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்திரளான மக்கள் கூடியுள்ளனர்.


banner

Related posts

கலைஞர் பல்கலை. மசோதா.. குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி

Ambalam News

அஜீத்குமார் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

Ambalam News

”நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்” – தவெக விஜய்..

Ambalam News

Leave a Comment