ஆர்.‌எஸ்.‌எஸ்க்கு எடப்பாடி பழனிச்சாமி சிவப்பு கம்பள வேரவேற்பு கொடுக்கிறார். விஜய் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் – தொல். திருமாவளவன்



ஆர்‌எஸ்‌எஸ் இங்கே வளர்வதற்கு அதிமுகவோ, அல்லது இதர கட்சிகளோ, வாய்ப்பளிக்குமேயானால், அது தமிழக மக்களுக்கு செய்கின்ற துரோகம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
எல். முருகன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த தொல். திருமாவளவன், அவர் ஆர்‌எஸ்‌எஸ் பாசறையில் வளர்ந்தவர் அப்படி கருத்துக் கூறுவதில் வியப்போன்றும் இல்லை. அதிமுக பெரியார் பாசறையில் வளர்ந்த ஒரு அரசியல் இயக்கம். எம்ஜிஆர் ஜெயலலிதா போன்ற தலைவர்கள் ஆர்‌எஸ்‌எஸ் பிஜேபி போன்ற சக்திகள் இங்கே வளர்வதற்கு இடம் தரவில்லை என்ற கருத்து இங்கே வலுவாக இருந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அவர்களை பின்பற்றக்கூடியவர்கள் எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ் போன்ற சங்பரிவார் அமைப்புகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அதிமுகவை ஆர்‌.எஸ்.‌எஸ் வழிநடத்தினால் என்ன தவறு.? என்று கேள்வி எழுப்பக்கூடிய நிலையை உருவாகியிருக்கிறது. இது அதிமுகவின் நிலை எவ்வளவு பரிதாபமாக இருக்கிறது என்று உணர்த்தக்கூடியதாக இருக்கிறது.
விஜய் அவர்களுக்கும் அதேபோல வேண்டுகோளை விடுத்திருக்கிறார்கள் என்றால், விஜய் அவர்களின் பேச்சிலும், செயலிலும் அந்த சாயல் இருப்பதாக நம்புகின்றனர் என்றுதான் உணர வேண்டிய உண்மையாக இருக்கிறது.
அவர் எச்சரிக்கையாக இருப்பார் என்று நான் நம்புகின்றேன். ஆர்‌எஸ்‌எஸ் இங்கே வளர்வதற்கு அதிமுகவோ அல்லது இதர கட்சிகளோ வாய்ப்பளிக்குமேயானால், அது தமிழ்நாடு மக்களுக்கு செய்கிற மிகப்பெரிய துரோகமாக அமைந்து விடும் என்பதையும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் என்கிற முறையிலே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதேபோல திமுகவுடன் பயணிப்பது வரலாற்று தேவை என்பதாக நாங்கள் உணர்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


banner

Related posts

கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரண தொகை – டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி

Ambalam News

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படம் படம் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது

Admin

பள்ளி, கல்லூரி விடுதிகள் சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் – முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

Ambalam News

Leave a Comment