இந்தியாவுக்கே முன்னோடியான திட்டமாக, தமிழக முதல்வர் முக.ஸ்டாலினால் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த காலை உணவு திட்டம் மூலம் தமிழக அரசு பள்ளிகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் வாயிலாக 17 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கி வருகிறது.
மாணவ, மாணவியர்கள் காலை உணவுடன் கல்வி கற்று வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 26 அன்று இத்திட்டத்தினை நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின். இந்த திட்டம் மூலம் இனி 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பசியின்றி பாடம் கற்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
இன்று காலை முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்க தொடக்க விழா அழைப்பிதழை மாண்புமிகு திரு.வில்சன் எம்.பி அவர்கள் பஞ்சாப் முதலமைச்சர் அவர்களிடம் நேரில் வழங்கி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பில் வரவேற்றார்.
இந்தியாவுக்கே முன்னோடியாகவும், சர்வதேச அளவிலான தரத்துடனும் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவிற்கு பஞ்சாப் முதலமைச்சர் மாண்புமிகு பகவந்த் மான் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்கிறார்.
Related posts
Click to comment