பொன்முடியின் சர்ச்சை பேச்சு.. வீடியோவை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு



சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என் சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்கள் மீது காவல்துறை விசாரணை நடத்தி, புகார்களில் முகாந்திரம் இல்லை என முடித்து வைக்கப்பட்டதாகவும், அந்த புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறி வழக்கின் விவரங்களை சமர்ப்பித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, புகார்களில் முகாந்திரம் இல்லை என்று எந்த அடிப்படையில் காவல்துறையினர் முடிவுக்கு வந்தனர் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், 1972 ஆம் ஆண்டு அப்போதைய சமூக சீர்திருத்தவாதி தெரிவித்த கருத்துக்களையே முன்னாள் அமைச்சர் தற்போது தெரிவித்ததாகவும், வீடியோவை முழுமையாக பார்த்தால் அவருடைய பேச்சின் விபரங்கள் தெரியவரும் என விளக்கம் அளித்தார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் முழு பேச்சு குறித்த வீடியோவையும், 1972 ஆம் ஆண்டு அப்போதைய சமூக சீர்திருத்தவாதி பேசிய பேச்சுக்களின் விவரங்களையும் தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 28 ம் தேதிக்கு உயர்நீதி மன்ற நீதிபதி சதீஷ்குமார் தள்ளி வைத்தார்.


banner

Related posts

கலைஞர் பல்கலை. மசோதா.. குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி

Ambalam News

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று உண்ணாவிரத போராட்டம் – ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு

Ambalam News

6 மாதங்களில் 769 வழக்குகளில் 1133 பேருக்கு சிறை – தென்மண்டல ஐ.ஜி., பிரேம்குமார் ஆனந்த் சின்ஹா அதிரடி

Ambalam News

Leave a Comment