12 கிலோ ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சா கடத்தல்… இருவர் கைது… சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..



தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் வழக்கம் போல கண்காணித்து கொண்டு இருந்தனர்.
அப்போது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், சுற்றுலா பயணிகளாக, தாய்லாந்து நாட்டிற்கு சென்றுவிட்டு விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்தனர்.
அவர்கள் இருவர் மீதும், சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இருவரையும் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதையடுத்து அவர்கள் பைகளை, சோதனை செய்ய போதைப் பொருள்களை கண்டுபிடிக்கும், மோப்ப நாயை கொண்டுவந்து சோதனை செய்தனர். மோப்ப நாய் இருவருடைய பைகளிலும், போதைப் பொருட்கள் இருப்பதற்கான சைகைகளை செய்து உறுதி செய்தது.
சுங்க அதிகாரிகள், இருவர் பைகளையும் திறந்து பார்த்தபோது, மொத்தம் 8 பார்சல்களில் உயர்ரக, பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.
8 பார்சல்களிலும், மொத்தமாக, சுமார் 12 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்துள்ளது. இந்த கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.12 கோடி. இதையடுத்து ரூ.12 கோடி மதிப்புடைய 12 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அதோடு இருவரையும் சுங்க அதிகாரிகள் இந்தக் கஞ்சா எங்கிருந்து யார் மூலமாக பெறப்பட்டு யாருக்காக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இந்த கஞ்சாவை யாரிடம் கொடுப்பதற்காக கடத்தி வந்தனர்? இந்த ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்று தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


banner

Related posts

வெளி மாநில மதுபாட்டிகள் காரில் கடத்தல் – காரை கைப்பற்றி போலீசார் விசாரணை

Ambalam News

தொழிலதிபர் புகார் : நடிகை ஷில்பா ஷெட்டி மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு

Ambalam News

சொன்னதை செய்த இ.பி.எஸ்.? அடித்து நொறுக்கப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்.!

Ambalam News

Leave a Comment