திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், வங்கியில் பணிபுரியும் மேலாளர் மற்றும் ஊழியர்களே மெகா மோசடியில் ஈடுபட்டு பணத்தை சுருட்டி போலீசில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.3 கோடி மோசடியில் ஈடுபட்ட வங்கியின் மேலாளர் விஜயலட்சுமி உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கவரிங் நகைகளை வைத்து பணம் பெற்ற 20 க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்து திருவண்ணாமலை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts
Click to comment