திருச்சி மத்திய சிறையில், மதுரையை சேர்ந்த ஹரிஹரசுதன் என்பவர் தண்டனை கைதியாக உள்ளார். கடந்த ஜூலை 29 அன்று, மதியம், சிறையில் ஹரிகரசுதன் துாங்கிக் கொண்டிருந்த போது, வழக்கம் போல அவ்வழியே சோதனைக்கு வந்த துணை ஜெயிலர் மணிகண்டன், ஹரிஹரசுதனை எழுப்பி, ‘ஏன் துாங்கிக் கொண்டிருக்கிறாய்?’ என, கேட்டபோது, ஹரிஹரசுதன் திமிர்தனமாக பதில் சொல்ல, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, துணை ஜெயிலர் மணிகண்டனை, ஹரிஹரசுதன் தாக்கியுள்ளார் அவருக்கு ஆதரவாக, அதே அறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதிகள், ஆனந்த், ராஜேஷ், மகாதேவன் ஆகியோரும் சேர்ந்து மணிகண்டனை கடுமையாக தாக்கியுள்ளனர். பாதுகாப்பு பணியில் இருந்த சிறைத்துறை போலீசார், அவர்களை விலக்கி விட்டு, மணிகண்டனை காப்பாற்றியதாக கூறப்பட்டது.
இந்த தாக்குதலில் மணிகண்டன் காயமடைந்ததாக கூறப்பட்டதை அடுத்து, இந்த பிரச்னை குறித்து திருச்சி கே.கே.நகர் போலீசார் விசாரித்தனர்,
இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதி தாக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், துணை ஜெயிலர் மணிகண்டன், தலைமைக் காவலர் அருண்குமார் மேலும் 20 சிறை காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைவாசி தாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் கே.கே.நகர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். திருச்சி மத்திய சிறையில் நடக்கும் விஷயங்கள் மர்மமாக இருப்பதாக பேசப்படுகிறது. சிறைத்துறை தலைவர் ஆய்வு செய்வாரா.?
Related posts
Click to comment