நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ்க்கு மீண்டும் திருமணம்



பாரதிராஜாவின் ”புதுநெல்லு புது நாத்து ”என்ற படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நெப்போலியன். திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டு மத்திய அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார்.
இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்துகொண்டார் நடிகர் நெப்போலியன். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் அவரது மூத்த மகன் தனுஷ் சிறுயதிலேயே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரின் சிகிச்சைக்காக நெப்போலியன், தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். தனது மூத்த மகன் மீது கொண்ட பாசத்தினால் அவரது ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதில் அக்கரைக்காட்டி வந்தார் நெப்போலியன்.
சமீபத்தில் தனது மூத்த மகன் தனுஷ்க்கு அக்ஷயா என்ற பெண்ணுடன் ஜப்பானில் கோலாகலமாக திருமணம் நடத்தினார். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாக பரவியது.
முதல் திருமணம் ஜப்பானில் நடைபெற்ற நிலையில், தற்போது அமெரிக்க முறைப்படி மீண்டும் திருமணம் செய்து வைத்துள்ளார்.
முதல் திருமணம் ஜப்பானில் நடைபெற்ற நிலையில், தற்போது அமெரிக்க முறைப்படி மீண்டும் திருமணம் செய்து வைத்துள்ளார். இது குறித்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ள நெப்போலியன், உங்களின் அன்போடும் ஆசீர்வாதத்துடனும், அமெரிக்க அரசின் திருமண அனுமதிபெற்று நேஷ்வில்லில் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்கள், நண்பர்கள் முன்னிலையில், நேஷ்வில் ஶ்ரீ கணேஷ் கோவிலின் மூத்த குருக்களின் வாழ்த்துக்களோடு, அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் தலைமையில், அமெரிக்க முறைப்படி , எங்கள் மகன் தனுஷ்க்கும் அக்ஷயாவிற்கும் திருமணம் இனிதே நடைபெற்றது. உங்களின் மேலான பார்வைக்கும் உங்களின் வாழ்த்துக்களுக்கும்.! நன்றிகள் பல கோடி.! என்று பதிவிட்டுள்ளார்.


banner

Related posts

கரூர் பஸ்களை திருச்சி ம.பே. நிலையத்திலிருந்து இயக்க அனுமதி – தனியார் பஸ் உரிமையாளர்கள் வழக்கில் கோர்ட் தீர்ப்பு..

Ambalam News

ஓட்டு திருட்டு – ஜனநாயக படுகொலை

Ambalam News

கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசல் வழக்கு | விசாரணையை தொடங்கியது ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையிலான குழு

Ambalam News

Leave a Comment