கடன் தொல்லை மூன்று பெண் குழந்தைகளை கொடூரமாக கொன்று தந்தை தற்கொலை..



நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடன் தொல்லை தாங்காமல், மூன்று பெண் குழந்தைகளை கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டு தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வேப்பங் கவுண்டன்புதூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவு பாரதி இந்த தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். கோவிந்தராஜ், விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றிய பொறுப்பாளராகவும் இருக்கிறார். சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில், மேலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

நேற்று (திங்கட்கிழமை) இரவு, குழந்தைகளுடன் இரவு உணவு அருந்திவிட்டு உறங்க சென்றுள்ளார். மனைவி பாரதி மற்றும் ஒரு வயது மகன் அக்னீஸ்வரன் மட்டும் படுக்கையறையில் உறங்க சென்றுள்ளனர். அதேசமயம் கோவிந்தராஜ் மற்றும் அவரது 3 மகள்களும் வீட்டின் அறையில் உறங்கியுள்ளனர். அதிகாலை அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது, எழுந்த கோவிந்தராஜ் மனைவி உறங்கிக் கொண்டிருந்த அறையை வெளிப்புறமாக பூட்டியுள்ளார்.
இதைடுத்து, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த மூன்று மகள்களையும் சரமாரியாக வெட்டி கழுத்தை அறுத்துள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு பதறியடித்து பாரதி எழுந்துள்ளார். ஆனால், வெளிப்புறம் கதவு பூட்டப்பட்டிருந்ததால் அவரால் எதுவும் செய்ய முடியாமல் தவித்து கதறியுள்ளார்.
தன்னுடைய 3 பெண் குழந்தைகளையும் துடிதுடிக்க கொலை செய்த கோவிந்தராஜ், ஏற்கனவே தயாராக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து சரிந்து விழுந்துள்ளார். அப்போது அவரது மனைவி பாரதியின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அப்போது மூன்று குழந்தைகளும் பேரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் படுக்கையறையின் கதவை திறந்து பாரதி மற்றும் ஒரு வயது சிறுவனையும் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மங்களாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் கோவிந்தராஜ் உட்பட 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடந்து விசாரித்து வருகின்றனர்.


banner

Related posts

பாஜக அரசுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக வாபஸ் – எம்.பி. சசிகாந்த் செந்தில்

Ambalam News

தீர்ப்பைக் கேட்டதும் சிறுமி தற்கொலை முயற்சி : சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு

Ambalam News

பிரதமர் மோடி ஜப்பான், சீனாவிற்கு இன்று பயணம்..!

Ambalam News

Leave a Comment