ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான் – திட்டவட்டமாக கூறிய ராமதாஸ்


விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் இல்லத்தில் அவரது நாற்காலியில் அதிநவீன ஒட்டு கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டதால், தன்னுடைய சோபாவை மாற்றினார் பாமக நிறுவனர் ராமதாஸ். அந்த கருவி லண்டனிலிருந்து வாங்கப்பட்டதாக ராமதாஸ் கூறியிருந்தார். ஒட்டுக்கேட்பு கருவியின் உள்ளே இருந்த லைகா சிம், பேசும்போது மட்டும் ஆன் ஆகும் சிறப்பு வசதி கொண்டது.

பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஒட்டுக்கேட்பு கருவி கடந்த ஜூலை 23 இம் தேதி விழுப்புரம் கிளியனூர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதுதொடர்பாக புதுச்சேரி கீரனூர் காவல் நிலையம் மற்றும் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் பாமகவினர் புகார் அளித்தனர். கோட்டகுப்பம் டிஎஸ்பி உமாதேவியிடம் பாமக தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன் ஒட்டுக்கேட்பு கருவியை ஒப்படைத்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டதாக அளித்த புகாரில், ஏடிஎஸ்பி தினகரன் தலைமையிலான போலீசார் அவரது வீட்டில் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து பேசிய ராமதாஸ் தைலாபுரம் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணியாக மட்டுமே இருக்க முடியும் என்று கூறியுள்ள ராமதாஸ், ஒட்டுக்கேட்பு கருவியை அன்புமணியை தவிர வேறு யாரும் வைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்


banner

Related posts

அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி

Admin

தவெக விஜய் மாநாட்டுக்கு சென்றவர் மர்ம மரணம்.? 6 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு – நடந்தது என்ன.?

Ambalam News

இரயில் பயணிகளை திடீரென தாக்கிய பீகார் இளைஞர் – கோவையை சேர்ந்த முதியவர் பரிதாப மரணம்..

Ambalam News

Leave a Comment