தேர்தல் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
சட்டமன்ற தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
அதே சமயத்தில், தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என டெல்லி தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார்.