அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி


அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் அனுமதி

காலை நடைப்பயிற்சியின்போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதால், தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்போலோ நிர்வாகம் அறிக்கை விடுத்துள்ளது.

தமிழக முதலமைச்சர் மு..ஸ்டாலின், இன்று காலை வழக்கமாக நடைப்பயிற்சி சென்றபோது அவருக்கு ஏற்பட்ட லேசான தலைச்சுற்றல் காரணமாகசென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தினமும் காலை நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இன்று காலை அவர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென லேசான தலைச்சுற்றல் லேசான மயக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

உடனடியாக அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் மற்றும் திமுக கட்சியினர் ஆகியோர் உடன் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.


banner

Related posts

அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் உரிமம் புதுப்பிக்கப்படாத திரையரங்கு மீது சமூக ஆர்வலர் புகார்..

Ambalam News

சசிகலா, ஒபிஎஸ்ஸை கட்சியில் சேர்க்க.!? 10 நாள் காலக்கெடு – ஒற்றுமையே பலம் – கே.ஏ. செங்கோட்டையன்

Ambalam News

காவல்துறை, ஆசிரியர்களின் சாதிவாரி வாட்ஸ் அப் குழுக்கள் – சிபிஎம் செயலாளர் சண்முகம் பகீர் குற்றச்சாட்டு..! என்ன செய்யப்போகிறது.? தமிழக அரசு

Ambalam News

Leave a Comment