திருச்சி செந்தண்ணீர் புரம் கண்ணகி தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் . இவரது மகன் ரஷீத் அகமது (வ 28) இவர் தனபிரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது
சம்பவத்தன்று கணவன் மனைவிக்குள் ஏற்ப்பட்ட குடும்ப தகராறில் காதல் மனைவி தனப்பிரியா கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்து விரக்தியில் ரஷீத் அகமது நேற்று வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் அறையில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து பொன்மலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.