காங்கிரஸ் பாஜக திமுக போன்ற கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றிய பிரசந்த கிஷோர் நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தவேக கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளராக களமிறங்கப்பவவதாக செய்திகள் கசிந்துவந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த தவெகவின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில், பிரசாந்த் கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது “விஜய் ஒரு வழக்கமான அரசியல் தலைவர் இல்லை. அவர் தமிழகத்தின் புதிய நம்பிக்கையாக உருவாகியுள்ளார். தவெக, புதிய அரசியல் மாற்றத்தை விரும்பும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். இந்த மாற்றத்திற்கு நானும் ஒரு சிறு பங்காற்றுவேன்,” என்று அவர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவரது தனது சிம்ப்பிள் சென்ஸ் அனல்ட்டிக்ஸ் நிறுவனத்தின் மூலம், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் தவெகவிற்கு உத்திகளை வகுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரது நிறுவனம் தவெகவுடன் இணைந்து, மாநிலம் முழுவதும் தேர்தல் உத்திகளை உருவாக்கி வந்தது
இந்நிலையில், வருகின்ற நவம்பரில் நடக்கவிருக்கும் பிஹார் சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிடுவதால், அவர் தற்போது அங்கு தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இதனால், தவெகவிற்கு ஆலோசனை வழங்குவதில் இருந்து அவர் தற்காலிகமாக விலகியுள்ளார். பிஹார் தேர்தல் முடிந்த பிறகு, நவம்பர் 2025-க்கு பிறகு மீண்டும் தவெகவின் ஆலோசகராக இணைவது குறித்து முடிவு செய்வேன் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரஷாந்த் கிஷோர் மீண்டும் தவெக விற்கு தேர்தல் வியூக வகுப்பாளராக மீண்டும் வருவாரா.? என்ற எதிர்பார்ப்பு தவேகவினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.