தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு | குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..அரசியல் ஆதாயம் தேடும் எதிர்க்கட்சிகள்..?


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் பகுதியில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற மாணவி மாயமானார். முட்புதர் ஒன்றில் அவரது உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மாணவியின் ஆடைகள் கலைக்கப்பட்டிருந்ததால், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்தது. இச்சம்பவம் நடந்து பத்து நாட்கள் கடந்தும் குற்றவாளி பிடிபடாததால், ஆத்திரமடைந்த உறவினர்களும் பொதுமக்களும் நீதி கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இது முழுக்க முழுக்க ஒரு கொடூர குற்ற வழக்கு. ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் அறிக்கை கொடுத்து வந்தனர்.

திமுக அரசின் மெத்தனப்போக்கால் தான் இந்த சம்பவம் நடைபெற்றதாக கட்டமைத்து சமூக ஊடகங்களில் பரப்புரை செய்து வந்தனர். அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடுமைகள் இந்தியாவையே உலுக்கியதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மறந்து விட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. அதிமுக கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகளுக்கு சம்மந்தப்பட்ட நபர்களே அந்த குற்றத்தை நிகழ்த்தியதை மறந்து விட்டாரா.? என்று தெரியவில்லை. விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவம் தொடர்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன் புதிய வரவான தவெக விஜய் போன்றவர்களும் திமுக அரசு மீதும் காவல்துறை மீதும் குற்றம்சாட்டி வந்தனர்.

இதற்கிடையே, மாவட்டக் காவல்துறை சார்பில் பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. காற்றாலைப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்குரிய வகையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தர்ம முனீஸ்வரனைப் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் மாணவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் ஏற்கனவே ஒரு தொடர் குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு எட்டயபுரம் பகுதியில் அறுபது வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்திருந்த நிலையில்தான், தற்போது மீண்டும் ஒரு கொடூரச் செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்.

குற்றவாளி தர்ம முனீஸ்வரன் எவ்வாறு கைது செய்யப்பட்டார்.? அவர்தான் இந்த கொலையை செய்தார் என்பதற்கான ஆதாரங்கள் போன்றவற்றை காவல்துறையினர் வெளியிட்ட நிலையில், ஒரு தொடர் குற்றவாளியை கண்காணிக்காமல் காவல்துறை மெத்தனமாக செயல்பட்டுள்ளது. திமுக அரசின் நிர்வாக சீர்குழைவே இதெற்கெல்லாம் காரணம் என்ற ரீதியில் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர். பெரிய அளவிலான மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் குற்றங்கள் நடப்பதை முற்றிலுமாக ஒழித்து விட முடியுமானால் அதற்கான வழிமுறைகளை நீங்கள் வெளிப்படையாக சட்டமன்றத்தில் முன்வைத்து போராட்டலாமே.? சமூகத்தில் நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் ஆளும் அரசுதான் பொறுப்பு என்றால் அது உள்நோக்கம் உடைய கருத்தே தவிர வேறொன்றும் இல்லை. அரசியல் பாகுபாடுகளை கலைந்து இது போன்ற குற்றங்களை தடுக்க முயச்சி செய்வதுதான் மக்களுக்கான அரசியல். அவர்கள்தான் மக்களுக்கான அரசியல்வாதிகள். தேர்தல் நேரத்தில் ஆதாயம் தேடுபவர்கள் ஒருபோதும் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

ஒரு காமுகன் இப்படிப்பட்ட ஒரு கொடூர குற்றத்தில் ஈடுப்படதற்கு யார் பொறுப்பு.? அவனால் கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆதரவாக நின்று குரல் கொடுக்கவேண்டியவர்கள் அந்த மரணத்தை அரசியலாக்கி ஆதாயம் தேட நினைப்பது வெட்கக்கேடான விஷயமல்லவா.? இதற்கு பெயர்தான் பிண அரசியல்..
மக்களாட்சி தத்துவத்தில் எதிர்க்கட்சிகள் எப்படி செயல்படவேண்டும் என்பதை மறந்து அரசியல் ஆதாயம் தேடுவதை எப்படி விமர்சிப்பது என்றே தெரியவில்லை.

வரும் காலங்களிளாவது கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உதவி செய்வதே உங்கள் நோக்கமாக இருக்கட்டும்.
– எம். ஆனந்த்


banner

Related posts

ஜனநாயகன் பட சென்சார் சான்றிதழ் விவகாரம் | நீதிமன்றத்தை நாடிய படக்குழு – “யார் தடுக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்” – செங்கோட்டையன்..

Ambalam News

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய நாகேந்திரனுக்கு கல்லீரல் பாதிப்பு.? மருத்துவ ஆய்வு மேற்கொள்ள வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Ambalam News

எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக-திமுக கூட்டணி திட்டம் | உடைந்த அதிமுக…? சி.வி சண்முகம் தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவு…

Ambalam News

Leave a Comment