பிரபல ரௌடி தொப்பை கணேசன் என்கவுண்டர் விவகாரம் | இரண்டு நாட்களுக்கு முன்பே போலீசாரால் பிடித்து செல்லப்பட்டாரா.? – திகில் கிளப்பும் உறவினர்கள்..


பிரபல ரவுடியான தொப்பை கணேசன் என்பவர் இன்று (16.03. 2026)அதிகாலை சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே காவல் துறையினரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். மாதவரம் பகுதியில் கடந்த ஜனவரி 30ஆம் தேதி 25 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 15 சவரன் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் போலீசார் இவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

அந்த வகையில் இவரைப் பிடிக்கச் சென்றபோது, காவல் துறையினரைத் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது தற்காப்பிற்காக போலீசார் சுட்டதில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தொப்பை கணேசன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

முன்னதாக இவர் மீது 15க்கும் மேற்பட்ட கொலை மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததும், இவர் பிரபல தாதா ஒருவரின் நெருங்கிய கூட்டாளி என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரவுடி தொப்பை கணேசன் என்கவுன்டர் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் அவரை கைது செய்ய போலீசார் தேடி வந்தனர். அவர் மாதவரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, தனிப்படை போலீசார் இன்று காலை மாதவரம் சின்ன ரவுண்டானா அருகே சென்று அவரை கண்டறிந்து பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரைக் கண்ட தொப்பை கணேசன் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அண்ணா நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் காவலர் தினேஷ்குமார் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், கணேசனின் இடது மார்பில் குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

என்கவுண்டரில் உயிரிழந்த தொப்பை கணேசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தொப்பை கணேசன் இரண்டு நாட்களுக்கு முன்னரே போலீஸாரால் பிடித்து செல்லப்பட்டதாகவும், அதன்பின்னர் வேண்டுமென்றே அவரை போலீசார் சுட்டுக் கொண்றிருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரபல ரௌடிகள் என்கவுண்டர் செய்யப்படும்போது, இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுவது வழக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆதாயத்திற்காக கொலை சம்பவங்களில் ஈடுபடும் கொலை குற்றவாளிகளை ஆரம்பத்திலேயே காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதோடு, சம்பவ இடத்தை பார்வையிட்டு தீவிர விசாரணக்கு உத்தரவிட்டுள்ளனர்.


banner

Related posts

விநாயகர் சிலை ஊர்வலம் – கள்ளக்குறிச்சியில் இந்து முன்னணி பொதுமக்கள் இடையே மோதல்

Ambalam News

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்

Ambalam News

டெல்லி காங்கிரஸ் கூட்டம் | “#இந்த அல்ற சில்ற IT Wing பாவம். நலம் பெற வாழ்த்துக்கள்” மீண்டும் திமுகவை விமர்சித்த மாணிக்கம் தாகூர் .. திமுகவினர் கடு..கடு..

Ambalam News

Leave a Comment