கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவாடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த ஒரு கார் போலீசாரை கண்டதும் தப்பிக்கும் நோக்கில் அதி வேகமாக சென்றுள்ளது. வேகமாக சென்ற கார் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தென்னை மரத்தில் மோதி நின்றுள்ளது. இந்த சிறு விபத்தில் காரின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியுள்ளது.அந்த காரை பின்தொடர்ந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கிய அந்த வாகனத்தை சோதனை செய்ததில் 375 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் சிக்கியுள்ளது.
காரில் குதிகா கடத்தி வந்த கணேசன், திலீப் சிங், முகமது அப்துல்லா ஆகியோர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.. கடத்திவரப்பட்ட குட்கா பொருட்களை பார்வையிட்ட கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ச. ஜெயக்குமார் IPS அவர்கள் குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொண்ட போது, இது போன்ற போதைப்பொருட்களை நீங்கள் சாப்பிடுவிங்களா.?உங்கள் பிள்ளைகளுக்கு கொடுப்பியா.? நீ மட்டும் சாப்பிட மாட்டா.? ஆனால் விற்பனை செய்வாயா.? என்று கேள்வி எழுப்பியதோடு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
லாட்டரி வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிய போலீசார் மீது பாரபட்சம் காட்டாமல் துறை ரீதியான நடவடிக்கை எடுத்த எஸ். பி. என்று ஏற்கனவே பெயரெடுத்தவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. ஜெயக்குமார் IPS என்பது குறிப்பிட்டதக்கது.
கடலூர் மாவட்டத்தில் லாட்டரி, மது கடத்தல், குட்கா கடத்தல், போதை பொருட்கள் கடத்தலுக்கு எதிராக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ச. ஜெயக்குமார் IPSசாட்டையை சுழற்றி வருவது குறிப்பிடத்தக்கது

