புதுமை பெண் திட்டம் | மாணவி சொன்ன நிஜ கதை.. கண்ணிர்விட்டு அழுத உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..


புதுமை பெண் திட்டம் மூலம் ரம்யா பெற்ற ரூ.1000 அவளது கல்வி செலவையும் அம்மாவுக்கு செவி கருவி வாங்கவும் உதவிய கதையை கேட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவரும் கண்ணிர்விட்டு அழுத நிகழ்வு மனதை உருக்குவதாக இருந்தது.

தமிழ்நாடு அரசு கல்வித் துறையில் செய்த சாதனைகளைக் கொண்டாடும் வகையில், ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற பெயரிலான விழா, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை 4 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.


இதில், புதுமை பெண் திட்டத்தால் பயன்பெற்ற ரம்யா எனும் மாணவி இந்தத் திட்டத்தின் மூலம் தான் பெற்ற மாதம் ரூ. 1000 தன் வாழ்வை எப்படி மாற்றியது தன் குடும்பத்திற்கு எப்படி உதவியாக இருந்தது என்பதை மேடையில் பேசினார். இவர் பேச்சை கேட்டு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் கண்கலங்கினர். இதில் அமைச்சர் அன்பில் மகேஸ் மாணவியின் பேச்சை கேட்டு, கண்ணீர் விட்டனர். இந்த காட்சி அனைவரின் நெஞ்சத்தையும் உருக்குவதாக இருந்தது.

மேடையில் பேசிய ரம்யா, “நான் நினைக்காத அனைத்தும் என் வாழ்வில் நடந்து வருகிறது. அப்பா கூலி வேலை செய்கிறார். அவரால் என்னை உயர்கல்வியை படிக்க வைக்க முடியவில்லை. அதனால், நானும் வேலைக்கு சென்று கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வந்தேன்.

அப்போது எனது ஆசிரியை அப்பாவை அழைத்து கல்லூரிக்கு பணம் கட்டிக்கொள்ளலாம். குழந்தையை கல்லூரிக்கு அனுப்புங்கள் சொன்னார். அதன்படி ஆசிரியை எனது கல்வி கட்டணத்தை கட்டிவிட்டார். அதன்பிறகு கல்வி சார்ந்த எனது அனைத்து செலவுகளையும் நான் இந்த ரூ.1000 மூலம் நிறைவேற்றிக் கொள்கிறேன்.

இதை எல்லாம் விட மிகப்பெரிய விஷயத்தை இந்த ரூ. 1000 மூலம் நடத்தியுள்ளேன். என் அம்மா செவி திறன் குறைப்பாடு கொண்டவர். அம்மா அப்பாக்கு கல்யாணம் ஆகி வெகு நாள் கழித்து தான் நான் பிறந்தேன். இதனால், ”காது கேட்காத நீ எதுக்கு பொண்ண படிக்கவைக்கிற” என அம்மாவை நிறைய பேர் பேசியதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்கு மிகவும் மன வருத்தமாக இருக்கும்.

தற்போது வரும் இந்த 1000 ரூபாயில் மாதம் மாதம் ரூ. 100 மிச்சப்படுத்தி என் அம்மாவுக்கு செவி கருவி வாங்கிக் கொடுத்தேன். தற்போது அதன் மூலம் அவர் கேட்கும் திறன் பெற்றுள்ளார்.” என பேசினார்.

இதனை கேட்டபோது, பார்வையாளர் பகுதியில் இருந்த ரம்யாவின் தந்தையும், தாயும் கண்ணீர்விட்டு அழுத்தனர். அதேபோல், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இருவரும் கண்ணிர்விட்டு அழுதனர்.

அதேபோல், எம்.பி. கனிமொழி, மாணவி ரம்யா புதுமை பெண் திட்டம் மூலம் பயன்பெற்றது குறித்து, விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியிடம், விளக்கினார். அதனை கேட்டு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வியந்தே போனார்.


banner

Related posts

‘’ஆபரேஷன் அகால்’’ இராணுவத்தின் தேடுதல் வேட்டை – 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.. தொடரும் தேடுதல் வேட்டை…

Ambalam News

திருவண்ணாமலையில் 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வன பகுதியாக அறிவிக்க நீதிமன்றத்தில் சிறப்பு குழு பரிந்துரை..

Ambalam News

பேஷண்டுக்கு“வீல் சேர் வேணும்னா.? பணம் கொடுக்கணும்.!? கோவை ஜிஹெச் அசிங்கம்..கண் துடைப்பு நடவடிக்கை? எடுத்த டீன் கீதாஞ்சலி.!!

Ambalam News

Leave a Comment