கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையை கண்ணன். போர்வெல் போடும் வேலை செய்து கண்ணனுக்கு ஸ்ரீதிவ்யபாரதி என்பவருடன் திருமணமாகி இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
ஸ்ரீதிவ்யபாரதி அருகில் உள்ள ரைஸ் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர் கண்ணன் மனைவியை வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. ஆனால், ஸ்ரீதிவ்யபாரதிக்கு வேலையை விடுவதில் துளி கூட விருப்பம் இல்லை.
ஒரு கட்டத்தில் கணவன் கண்ணன் மீது ஆத்திரமடைந்த ஸ்ரீதிவ்யபாரதி வீட்டில் சமைப்பதற்கு பயன்படுத்தபடும் எண்ணெய்யை திட்டமிட்டு கொதிக்க வைத்து கணவர் மீது உற்ற முடிவெடுத்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம் போல் வீட்டிற்கு வந்த கண்ணன் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு தூங்கியுள்ளார். அந்த நேரத்தில் மனைவி ஸ்ரீதிவ்யபாரதி சமையலுக்கு வைத்திருந்த எண்ணெய்யை கொதிக்க வைத்து, எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த கணவனின் இரண்டு கால் முட்டிகளுக்கு கீழே கொதிக்க கொதிக்க ஊற்றி உள்ளார்.
கால் வெந்து அலறித்துடித்தபடி எழுந்த கண்ணனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கணவர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் மனைவி ஸ்ரீதிவ்யபாரதி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related posts
Click to comment