அதிமுக உட்கட்சி விவகாரம்: நெருக்கடியில் எடப்பாடி பழனிச்சாமி.!? மான் வேட்டை சிக்கும் திமுக வி.ஐ.பி.? விசாரணை வலையத்தில் அண்ணாமலை.?


சிலைடு சிங்காரம் கடுப்பு கந்தசாமி – அரசியல் அரட்டை
எடப்பாடியார் டெல்லி செல்ல இருக்கும் நிலையில், அடுத்து ஒபிஎஸ்ஸும் டி.டி.வி. தினகரனும் டெல்லி செல்வார் போல தெரிகிறதே.? அதிமுகவை ஒருங்கிணைக்க பாஜக தலைமை களமிறங்கி விட்டதா.? என்று கடுப்பு கந்தசாமியிடம் கேட்டபடியே வந்து அமர்ந்தார் சிலைடு சிங்காராம்
சிலைடு சிங்காரம்… பாஜகவுக்கு திமுகவை ஆட்சி கட்டிலில் ஏறாமல் தடுக்க வேண்டும் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், அப்செட்டில் இருந்த தேசிய பாஜக தலைமையை மேலும் உசுப்பேற்றும் விதமாக அண்ணாமலை திமுகவின் செல்வாக்கு கூடியிருக்கிறது என்ற வகையில் பொருத்தி போட்டிருக்கிறார்.
தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் எடப்பாடியாருக்கு எதிரான கருத்துகளை முவைத்திருக்கிறார்கள். அதிமுகவை ஒருங்கிணைத்தால் மட்டுமே வெற்றி நிச்சயம் என்று எடுத்துக் கூறியிருக்கிறார்கள். எடப்பாடியாருக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக அவர்களுடைய காய் நகர்த்தல்கள் வேகமடைந்துள்ளதாம். பாஜக தமிழக தலைவரும் இதே கருத்தைதான் முன்மொழிந்திருப்பதாக தகவல்கள் வருகிறது.
செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பிய நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து, முதலில் யாரிடம் இருந்து பேச்சுவார்த்தையை தொடங்குவது.? என்ற ஆலோசனையில், எடப்பாடியாருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக, முதலில் பேச்சுவார்த்தையை எடப்பாடியாரிடம் இருந்தே தொடங்க பாஜக தலைமை முடிவெடுதிருக்கிறதாம். சந்திப்பின்போது, எடப்பாட்டியருக்கு சில உத்தவாதங்களை பாஜக அளிக்குமாம். அதன் பின்னர் ஓபிஎஸ் டிடிவி.தினகரன் ஆகியோரை அழைத்து பேச உள்ளதாம்.
ஒருங்கிணைப்புக்கு எடப்பாடியார் ஒப்புக்கொள்வாரா.?
சிலைடு சிங்காரம்…டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் அதிமுக பலமாகத்தான் இருக்கிறது என்று எடப்பாடியார் கூறினாலும், அங்கு அதிமுகவின் வாக்குவங்கி வெகுவாக சரிந்திருப்பதை நன்கு உணர்ந்திருக்கிறாராம். மேலும் மேலும் எடப்பாடியாரின் கையை பலகீனபடுத்தும் வேளைகளில் ஓபிஎஸ் டிடிவி தினகரன் இறங்கியதையடுத்து கட்சிக்குள் எழும் கலகக் குரல்களால் வேதனையில் இருக்கிறாராம். போதாக்குறைக்கு, கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையன் தன் ஆதரவாளர்களுடன் தனக்கு எதிராக கட்சி நிர்வாகிகளிடமும் தொண்டர்களிடமும் பிரச்சாரம் செய்து வருவது கொங்கு மண்டலத்தில் தனக்கான இமேஜை உடைத்துவிடும் என்ற வேதனையிலும் இருப்பதாக தகவல்கள் வருகிறது.
அதே சமயத்தில் கூட்டணிக்கட்சியான பாஜகவை அவர் முழுமையாக நம்பவும் இல்லை. உட்கட்சி பிரச்னையில் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக தமிழகத்தில் தங்களை வளர்த்துக்கொள்ள அதிமுகவின் உட்கட்சி பூசலை பயன்படுத்தி வருகிறது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அதிமுகவின் மூத்த தலைவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
பாஜகவை பக்கத்துக் கொண்டால், என்ன நடக்கும் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும். அதுமட்டுமின்றி பிடிவாதமாக ஒருங்கிணைப்பை மறுத்து, தேர்தலை சந்தித்து தோற்றுவிட்டால், உட்கட்சியிலேயே கலகம் வெடிக்கும், பாஜக முன் தலை குனிய வேண்டும். அதன்பின் அதிமுகவில் எழும் உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டு வருவது என்பது இயலாத காரியமாகி விடும். பாஜகவின் தயவும் கிடைக்காது. ஆக, இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் ஒருங்கிணைப்பு செய்வதை தவிர அவருக்கு வேறு வழியில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
செங்கோட்டையன் அமைதியாக இருக்கிறாரே.?
அமைதிக்கு பின் அடுத்த பூகம்பம் எதுவும் இல்லை சிலைடு சிங்காரம். பாஜக அவரை சைலன்ட் மோடில் போட்டிருக்கிறது. எடப்பாடியார் டெல்லி சென்று விட்டு வந்தவுடன் அனைத்திற்கும் விடை கிடைக்கும்.
திமுக பக்கம் ஏதேனும் பரபரப்பு அரசியல் செய்திகள் உள்ளதா.?
பரபரப்பான ஆர்சியல் செய்திகள் ஒன்றும் இல்லை சிலைடு சிங்காரம்.. மான்கறி விருந்து விவகாரம் ஒன்று கிளம்பி உள்ளது.!! இதில் திமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவர் பெயர் அடிபடுகிறது.!!
சமீபத்தில் தென்காசியில் மான் வேட்டையில் ஈடுபட்ட ஒரு கும்பல் சிக்கியிருக்கிறது..தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே போலீஸார் ரோந்து சென்றபோது, ஊத்துமலை பகுதியில் மானை வேட்டையாடி எடுத்துச் சென்ற ஒரு கும்பல் ஆயுதங்களுடன் சிக்கியிருக்கிறது. போலீசாரிடம் சிக்கிய தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தைச் சேர்ந்த ரஞ்சித் சிங், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த பொன் ஆனந்த், ராஜலிங்கம் ஆகிய மூவரை வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளது வனத்துறையின் விசாரணையில், `தி.மு.க-வின் தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான டி.எம்.எஸ் முகேஷ்தான் மான் வேட்டையாடுவதற்கு வரவழைத்தார். குற்றாலத்தில் தங்கியுள்ள அரசியல் வி.ஐ.பி ஒருவருக்காகத்தான் மான் வேட்டைக்கு சென்று வேட்டையாடினோம் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனால் தென்காசி மாவட்ட திமுகவில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
எந்த வி.ஐ.பி க்காக மான் வேட்டையாடப்பட்டது என்ற விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும், தி.மு.க-வின் தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான டி.எம்.எஸ் முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா.? என்ற விபரங்களும் வெளிவரவில்லை.

பாஜக அண்ணாமலை விவகாரத்தில் புதிய செய்திகள் எதுவும் உண்டா.?
அண்ணாமலை நிலம் வாங்கிய விவகாரம் தேசிய தலைமை வரை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் பாஜகவின் இமேஜை குழி தொண்டி புதைத்துவிட்டார் அண்ணாமலை என்று தமிழக பாஜகவினர் புலம்பி இருக்கின்றனர். விரைவில் அண்ணாமலை மீதும் அவரை சுற்றியுள்ளவர்கள் மீதும் விசாரணை தொடங்குமாம். இனி அண்ணாமலைக்கு இறங்குமுகம் தான் என்கின்றனர்.


banner

Related posts

வழிப்பறி குற்றவாளியிடம் பறிமுதல் செய்த பணத்தை சுருட்டிய ‘’பலே பெண் இன்ஸ்பெக்டர் ’’ – ஆயுதபடைக்கு மாற்றி அதிரடி காட்டிய கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார்..

Ambalam News

புதுச்சேரியில் ரங்கசாமியுடன் தவெக கூட்டணி என்று வதந்தி – புஸ்லி ஆனந்த் அறிக்கை

Ambalam News

‘’பெண்குலத்திற்கே பெருமை சேர்க்கிற மகளிர் மாநாடு’’ – ஊடகத்தினரை அழைத்த டாக்டர் ராமதாஸ்

Ambalam News

Leave a Comment