சமூக ஆர்வலரை கார் ஏற்றி படுகொலை செய்த திமுக நிர்வாகி கைது – அதிர்ச்சி சம்பவம்..


முறைகேட்டை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலரை திட்டமிட்டு, திமுக பேரூராட்சி தலைவர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர், அண்மையில், சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு உதவாத, தனி நபர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் சாலை போட்டிருப்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்து, விசாரணையை வலியுறுத்தியுள்ளார். தன் மீது மாவட்ட ஆட்சியர் பஞ்சாயத்து பொறியாளரிடம் புகாரளித்த சமூக ஆர்வலர் பழனிச்சாமியை, குடிபோதையில் காரை ஏற்றி கொலை செய்திருக்கிறார் திமுக பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி.
திருப்பூரில் முறைகேடாக போடப்பட்ட தார் சாலை பணியை தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர் பழனிச்சாமி என்பவரை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி கார் ஏற்றி கொலை செய்துள்ளார். தனக்கு எதிராக புகார் கொடுத்தவரை, திட்டமிட்டு கொலை செய்த பேரூராட்சி தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சாமளாபுரம் பேரூராட்சி தலைவராக இருப்பவர் விநாயகா பழனிச்சாமி. திமுகவை சேர்ந்த இவர் வியாழன் அன்று பிறபகல் தனது பொலிரோ ஜிப் பில் காரணம்பேட்டையில் இருந்து தனது வீட்டிற்கு சென்றுள்ளார். மங்கலம் அருகே கருக்கம்பாளையம் பள்ளி பகுதியில் சென்றபோது, அங்கே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சமூக ஆர்வலர் பழனிச்சாமி என்பவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளார்.
இந்த விபத்தில் கீழே விழுந்த சமூக ஆர்வலர் பழனிச்சாமிக்கு தலையில் காயம் ஏற்பட்டு, சாலையிலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார். இவர் பேரூராட்சியில் நடைபெறக்கூடிய சாலை பணிகள் தரமற்று இருப்பதாக பலமுறை கேள்வி எழுப்பியவர். இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய திமுக பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமியை அடையாளம் கண்டு அருகில் இருந்தவர்கள் நிறுத்த முயன்ற போது, அவர் வாகனத்தை நிறுத்தாமல் தப்பி சென்று விட்டார்.
மேலும் விநாயகா பழனிசாமி, விபத்தை ஏற்படுத்தியபோது மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தினை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள், அவரை பரிசோதனை செய்த பொழுது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சமூக ஆர்வலரின் உடலை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மது போதையில் இந்த விபத்தினை ஏற்படுத்திய பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமியை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர்
அவரிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்ததற்கான காரணத்தை அவரே போலீசில் தெரிவித்து இருக்கிறார். கருக்கம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியில் முறைகேடாக தார் சாலை அமைப்பதாக டவுன் பஞ்சாயத்து பொறியாளரிடம் மனு அளித்து, சாலை பணியை நிறுத்தி இருக்கிறார் சமூக ஆர்வலர் பழனிசாமி. இதனால் ஆத்திரம் அடைந்த விநாயகா பழனிசாமி, மது அருந்தி விட்டு, அவர் மீது காரை மோதி கொலை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
அவர் மீது காரை மோதி காயம் ஏற்படுத்தவே திட்டமிட்ட நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக விநாயகா பழனிச்சாமி போலீசில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து. பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி மீது கொலை வழக்கு பதிவு செய்த மங்கலம் போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவம் சமூக ஆர்வலர்கள் மட்டுமின்றி பொது மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்த் சம்பவத்தை கண்டித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


banner

Related posts

கவின் காதலி சுபாஷினி வெளியிட்ட வீடியோ – பின்னணி என்ன.?

Ambalam News

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாறுகிறதா.? – காவல்துறை மீது தொடரும் நீதிமன்ற விமர்சனங்கள்..

Ambalam News

பாஜக அதிமுக கூட்டணி பழனிச்சாமி பயத்தில் எடுத்த முடிவு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Admin

Leave a Comment