டி.எஸ்.பி -யை கைது செய்ய நீதிபதி உத்தரவு.. போலீஸ் சீருடையுடன் தப்பி ஓடிய டி.எஸ்.பி – காவல்துறையில் பரபரப்பு..



அடிதடி வழக்கு ஒன்றில், நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்ற உத்தரவையும் பொருட்படுத்தாமல் செயல்பட்ட காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை வரும் 22ம் தேதி வரை சிறையில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து காவல்துறை சீருடையுடன் கைது செய்யப்பட்டார். இருப்பினும் அவர் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பூசிவாக்கம் என்ற பகுதியில் நடந்த அடிதடி சம்பவம் தொடர்பாக ஒருவர் புகார் அளித்துள்ளார். எஸ்.சி/எஸ்.டி. சட்டப்பட்டியந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையும் டிஎஸ்பி சங்கர் கணேஷும் புகார் தாரரை அலைக்கழித்துள்ளனர். எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளித்தும், காவல்துறை தரப்பில் இருந்து அந்த புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், ஒரு தரப்பினருக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான புகார்தாரார் தரப்பில், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, சட்டம் அனைவருக்கும் சமமானது. இந்த வழக்கில், நடவடிக்கை எடுக்க 15 நாட்கள் கெடு விதித்து உத்தரவிட்டது. மேலும் நடவடிக்கை இல்லை என்றால், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். நீதிமன்ற உத்தரவை முறையாக டிஎஸ்பி சங்கர் கணேஷ் செயல்படுத்தவில்லை என்று கூறப்பட்ட நிலையில், அந்த வழக்கு குறித்து, இன்று நடைபெற்ற விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்ட டி.எஸ்.பி சங்கர் கணேஷ் விசாரணைக்கு ஆஜரான நிலையில், அவரை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். ஒருமாத காலமாகியும் நடவடிக்கை எடுக்காததால் எஸ்.சி/எஸ்.டி. சட்டப்படி காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை வரும் 22ம் தேதி வரை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி செம்மல் உத்தரவிட்டதை தொடர்ந்து காவல்துறை சீருடையுடன், டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, சீருடையில் இருந்த டி.எஸ்.பி சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை வரும் 22-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, அவரை சிறையில் அடைக்க காவலர்கள் அழைத்து சென்றனர். அப்போது, சப் ஜெயில் பகுதியில் காவல்துறை வாகனத்தில் இருந்த சங்கர் கணேஷ் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தப்பிச்செல்ல சக காவலர்களே உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. டிஎஸ்பியின் இந்த செயலால் காஞ்சிபுர மாவட்ட காவல் துறையிலும் நீதித்துறையிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


banner

Related posts

என்கவுண்டர்: எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் கொலை… கொலையாளியை என்கவுண்டர் செய்தது போலீஸ்

Ambalam News

கேப்டன் பிரபாகரன் திரைப்படம் 800 திரையரங்குகளில் ரீரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்

Ambalam News

கடலூர் ரயில் தண்டவாளத்தில் பள்ளி வாகனம் கவிழ்ந்து 6 மாணவர்கள் படுகாயம்..

Ambalam News

Leave a Comment