பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
காட்டுமன்னார் கோவில் பேரூராட்சி அமமுக செயலாளர் முத்துப்பாண்டி இல்ல திருமண விழாவில் நேற்று கலந்து கொண்டு சிறப்பித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாஜக கூட்டணியில் இருந்து அமமுக விலகியதாகக் கூறினார்.
மேலும் என்டிஏ கூட்டணியில் துரோகம் தலைவிரித்து ஆடுவதாக தெரிவித்த டிடிவி தினகரன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அமமுக வெளியேறுவதாக அறிவித்தார். பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் ஏற்கனவே வெளியேறிய நிலையில் தற்போது டிடிவி தினகரனும் வெளியேறி இருக்கிறார்.
அவர்கள் திருந்துவார்கள் என்று பொறுமையாக இருந்தோம். நாங்களும் மூன்று, நான்கு மாத காலமாக டெல்லியை சேர்ந்தவர்கள் நல்ல முடிவெடுப்பார்கள் என்று காத்திருந்தோம். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்து விட்டது. ஆனால் அவர்கள் செய்ததை நியாயப்படுதுகிறார்கள், துரோகத்தை தலையில் தூக்கிக்கொண்டு சுற்றுகிறார்கள், துரோகிகளை தோலில் சுமக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்று தெரிவித்த டிடிவி தினகரன், டிசம்பர் மாதத்தில் அடுத்த கட்டத்தை பற்றி முடிவெடுப்போம். செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு யுகத்தின் அடிப்படையில் பதி சொல்ல முடியாது பொறுத்திருந்து பார்ப்போம் என்று பதிலளித்துள்ளார்.
முன்னதாக சில நாட்கள் முன் தென்காசியில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “2026 சட்டமன்றத் தேர்தலில் அமமுக யார் என்பதை உறுதியாக நிரூபிப்போம். கருத்துக்கணிப்புகள் ஒருபக்கம் இருக்கட்டும். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்பது தெரியவரும். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எத்தனை அணிகள், எந்தெந்தக் கட்சிகள் எந்தக் கூட்டணியில் இடம் பெறுகிறது என்பதும் வரும் டிசம்பர் மாதம் தெரியவரும்.
அந்த சமயத்தில், அமமுக எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடப்போகிறது என்பதும் தெரியவரும். 2026 சட்டமன்றத் தேர்தலில் அமமுகவின் தொண்டர்களும், நிர்வாகிகளும் விரும்பும் கூட்டணி அமையும்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதற்காக எங்களின் நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுத்தோம். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது வேறு. எனவே டிசம்பர் மாதம் எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related posts
Click to comment