டெல்லி பாஜக தலைவர்கள் கூட்டம்: கல்யாண நிகழ்ச்சிகள் இருக்கு.! அதனால் டெல்லி போகவில்லை.!!! – அண்ணாமலை


தலைநகர் டெல்லியில் இன்று பாஜக தேசிய தலைவர்கள் தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களை அழைத்து தேர்தல் உட்கட்சி பூசல்கள் குறித்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளாதது பாஜக தொடர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.
அண்மையில் தமிழகம் வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சிக்குள் ஒற்றுமை இல்லாதது, கட்சிப் பணிகளில் ஏற்பட்ட முடக்கம். மக்களை சென்றடையாத மத்திய அரசின் திட்டங்கள் போன்றவற்றால் அதிருப்தி அடைந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கோபத்துடனே டெல்லி புறப்பட்டுச் சென்றதாக சொல்லப்பட்டது. நிர்மலா சீத்தாராமன் தேசிய தலைவர்களின் கவனத்திற்கு தமிழக பாஜகவின் நிலையை தெளிவாக்கி இருக்கிறார்.
டெல்லிக்கான தமிழக சோர்ஸ்களும் அதேபோல ரிப்போர்ட் அடித்திருக்கிறார்கள். இதில் பாஜகவின் தேசிய தலைவர்கள் கடும் அப்செட்டாகியுள்ளனர்.
இது குறித்து, ஆலோசனை நடத்துவதற்காக, தமிழக பாஜக தலைவர்களை அமித்ஷா டெல்லி அலழைத்ததாக கூறப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்த கூட்டத்தில் பங்கேற்காதது பல்வேறு யூகங்களை கிளப்பிவிட்டிருக்கிறது. அதிமுகவுடன் 2023 ல் ஏற்பட்ட கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என்று அப்போது சொல்லப்பட்டது. தற்போதைய உட்கட்சி பூசல்களுக்கும் அண்ணாமலைதான் காரணம் என்று பாஜக தேசிய தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
கட்சி தலைவர் பதவி பறிபோன நிலையில் அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், தன் பொறுப்பை நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைத்த பின்னரும் கட்சியுடன் ஓரளவு நெருக்கம் காட்டி வந்தார் அண்ணாமலை.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிதான் 2026-ல் முதல்வர் என பேசியதில் தொடங்கி, பழனிசாமிக்கு அருகே இருக்கையில் அமர்ந்தது வரை அடுத்தடுத்த மாற்றங்களை கண்டு எதிரணியினரே ஆச்சரியப்பட்டுப் போகும் அளவுக்கு அவரிடம் மாற்றங்கள் காணப்பட்டது.!?
இருப்பினும் அண்ணாமலையால் தான் கடந்த முறை தேர்தலில் ஒரு சீட் கூட பெற முடியவில்லை என்ற வருத்தம் தேசிய தலைவர்களுக்கு இருந்து. அதேபோல அதிமுகவுடன் கூட்டணி அமைக்க அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கூட்டணி உறுதியாக வேண்டுமானால் அண்ணாமலை தலைவர் பதவியில் இருக்கக் கூடாது என்ற அதிமுகவின் அழுத்தம் ஒருபுறம் தொடர்ந்தது. அதனால் தான் தலைவர் பதவி நயினார் நாகேந்திரனுக்கு போனது.
நயினார் நாகேந்திரனுடன் நெருக்கம் காட்டி வந்தாலும் உட்கட்சி பூசல்களுக்கு அண்ணாமலைதான் காரணம் என்று தேசிய தலைமைக்கு சொல்லப்பட்டிருக்கிறதாம். இந்த தகவல்களையெல்லாம் அறிந்த அண்ணாமலை டெல்லி செல்வதை தவிர்த்திருக்கிறார்.
தேசியத் தலைவர் நட்டா, அமித்ஷா ஆகியோர் தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து தமிழக பாஜக தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், ஏன் அண்ணாமலை அந்த ஆலோசனை கூட்டத்திற்கு செல்லவில்லை என்ற கேள்வி எழுந்த நிலையில், அண்ணாமலை அளித்த பதில்தான் ஆச்சர்யத்தின் உச்சம்.
அதிகமான திருமண நிகழ்வுகள் மற்றும் வேலைகள் இருப்பதால் இன்றைய டெல்லி கூட்டத்திற்கு செல்ல இயலவில்லை என அவர் கூறியிருக்கிறார். இதனால் பாஜக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.


banner

Related posts

ராபர்ட் புரூஸுக்கு எதிரான தேர்தல் வழக்கு: நயினார் நாகேந்திரனிடம்1 மணி நேரம் குறுக்கு விசாரணை

Admin

வெளி மாநில மதுபாட்டிகள் காரில் கடத்தல் – காரை கைப்பற்றி போலீசார் விசாரணை

Ambalam News

மண்டல தலைவர்கள் ராஜினாமா.? முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

Ambalam News

Leave a Comment