துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற திமுக அமைச்சரின் மகன் பாஜக அண்ணாமலையிடம் பதக்கம் வாங்க மறுப்பு



துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற திமுக அமைச்சரின் மகன் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் இருந்து பதக்கம் பெற மறுத்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவாரக்குடிபட்டியில் தமிழ்நாடு துப்பாக்கி சங்கம் மற்றும் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்தூம் மாநில அளவிளான துப்பாக்கிச் சுடும் போட்டி நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி துவங்கிய துப்பாக்கி சுடும் போட்டி வரும் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு துப்பாக்கியால் இலக்கை துல்லியமாக சுட்டு அசத்தி வருகின்றனர். இதில் இதுவரை வெற்றி பெற்றவர்களுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று பதக்கங்களை வழங்கினார்.
இந்தப் போட்டியில், டி.ஆர்.பி. ராஜாவின் மகன் சூரிய ராஜபாலுவும் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு அண்ணாமலை பதக்கம் வழங்கினார். ஆனால், அப்போது அண்ணாமலையிடம் இருந்து பதக்கம் வாங்க மறுத்த அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு அண்ணாமலையுடன் நின்று புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டார். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.


banner

Related posts

திருவள்ளூரில் மீண்டும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை… கடத்திச் சென்ற அசாம் இளைஞர் சிக்கினார்..

Ambalam News

ரூ.300 கோடிக்கு ட்ரோன் ஆர்டர் கொடுத்த இந்திய ராணுவம்! சூடு பிடிக்கும் ட்ரோன் சந்தை

Admin

‘’உங்களுடன் ஸ்டாலின்’’ முகாமில் அதிகாரிகளுடன் அடிதடி – சிகிச்சையில் இருப்பவரை கைது செய்ய போலீஸ் தீவிரம்.?

Ambalam News

Leave a Comment