வரலட்சுமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பதிற்கு ஆறுதல் கூறிய தொல்.திருமாவளவன்


சென்னை மாநகராட்சி 13 வது மண்டலம் 195 வது வட்டம், கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த தூய்மைப்பணியாளர் வரலட்சுமி இன்று அதிகாலை பணியின்போது மழைநீரில் ஏற்பட்ட மின் கசிவினால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தமிழக அரசு வரலட்சுமியின் குடும்பத்திற்கு நிவாரண உதவிகளை வழங்கியது. மேலும் அவரது உடல் அடக்கம் செய்யும் பொறுப்பை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏற்றுக்கொண்டார். மின்கசிவு விபத்தில் உயிரிழந்த வரலட்சுமியின் கணவருக்கு பணி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. மேலுமவர்களது குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்றுக்கொள்ளும் என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டது.
தூய்மைப்பணியாளர் வரலட்சுமியின் மரணம் தொடர்பாக பல்வேறு கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவவாவன் எம்.பி. இறந்துபோன வரலட்சுமியின் கணவர் குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறி, வரலட்சுமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


banner

Related posts

‘’சொசைட்டி பரிதாபங்கள்’’ வீடியோ விவகாரம் – நடிகர் தாடி பாலாஜி ஆதரவு

Ambalam News

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு | தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகிய இருவரும் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Ambalam News

இறந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் – தவெக விஜய்

Ambalam News

Leave a Comment