பணம், சுகம் படுத்தும்பாடு கள்ளக்காதல் கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. ஆடுனா ஆட்டட்டும்னு விட முடியாது. இந்த திருட்டுப் பூனைகளுக்கு மணிகட்டியே ஆகவேண்டும் இல்லையெனில், இந்த கள்ளக்காதல் கலாச்சாரம் அப்பாவிகளை காவு வாங்கிக்கொண்டேதான் இருக்கும். கள்ளக்காதலர்கள் கண்மூடித்தனமாக கொலை கொடுமை போன்ற செயல்களில் இறங்கி கொண்டே தான் இருப்பார்கள்.
கடலூர் மாவட்டத்தில் தாயின் கள்ளக்காதல் பெற்ற மகளுக்கு தெரிந்து விட்டாதால், மகள் எங்கே வெளியில் சொல்லிவிடுவாளோ.? என்ற பயத்தில் தனது நாத்தனாருடன் சேர்ந்து கொண்டு மகளை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி போலீசில் சிக்கியுள்ளார் மணிமேகலை என்ற பெண்மணி. இது தொடர்பாக மணிமேகலை மற்றும் அவரது அண்ணன் மனைவி அனிதா ஆகிய இரண்டு பெண்களை கைது செய்துள்ள காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமேகலை இவரது கணவன் இறந்து விட்டார். தற்போது அண்ணன் வீட்டில் தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மணிமேகலையின் மகளை அவரது அண்ணன் மனைவி அனிதா கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. சிறுமியை அடித்து உதைப்பதும் அவரது உணவில் உப்பு, மிளகாய் பொடியை கலந்து வைப்பது என்று ரகரகமாக கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார். இதற்கு அவரது தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் வந்துள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை நடத்திய விசாரணையில், மணிமேகலை அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற நபருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த உண்மை வெளிவந்துள்ளது.
மணிமேகலை முருகன் கள்ளக்காதலுக்கு மணிமேகலையின் அண்ணன் மனைவியான அனிதாவும் உடந்தையாக இருந்திருக்கிறார். மேலும் இதனை மணிமேகலையின் மகள் தெரிந்து கொண்டதால், அவர் வெளியே கூறி விடுவார் என்ற பயத்தில் மணிமேகலையும், அனிதாவும் சேர்ந்து சிறுமியை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மணிமேகலை மற்றும் அனிதாவை கைது செய்துள்ள காவல் துறையினர், அவர்களிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாயின் கள்ளக்காதலை மகள் அறிந்து கொண்டதால், பெற்ற தாயே தனது அண்ணன் மனைவியுடன் சேர்ந்து கொண்டு மகளை கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
Related posts
Click to comment