தமிழ்நாடு அரசு காவல்துறையின் தற்போதைய இயக்குநர் திரு சங்கர் ஜிவால் அவர்களின் பணிக்காலம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய காவல்துறை இயக்குனருக்கான தகுதியுடைய ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பட்டியலை தமிழ்நாடு அரசு ஒன்றியப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எந்த பட்டியலும் தமிழ்நாடு அரசால் அனுப்பப்படவில்லை என்ற தகவல்கள் கசிந்து வருகிறது. புதிய காவல்துறை இயக்குனராக பதவியில் அமரப்போவது யார்.? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறையின் அடுத்த இயக்குநரைத் தேர்ந்தெடுக்க ஏதுவாக இந்திய அரசின் யூபிஎஸ்சி எனும் ஒன்றியப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் இதுவரை எந்தப் பட்டியலும் அனுப்பப்படவில்லை
காவல்துறை இயக்குநரைத் தேர்வு செய்து பணியில் அமர்த்தும் முன்பாக, மாநில அரசு, மூப்பின் அடிப்படையிலும் தகுதியின் அடிப்படையிலும் அடுத்தடுத்து வரிசையில் இருக்கும் தகுதி உடைய ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை இந்திய அரசின் ஒன்றியப் பணியாளர் தேர்வாணையத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே அனுப்ப வேண்டும். அதில் மூன்று பேரை தேர்ந்தெடுத்து தேர்வாணையம் மாநில அரசுக்கு பரிந்துரைக்கும். அந்த மூன்று பேரில் ஒருவரை தேர்ந்தெடுத்து காவல்துறை தலைமை இயக்குநராக மாநில அரசு நியமிக்கும்.
தற்போதைய காவல்துறை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால் அவர்களின் பணி காலம் இன்னும் ஒரு வார காலமே இருக்கக்கூடிய நிலையில், இதுவரை தமிழ்நாடு அரசு சார்பில் யூபிஎஸ்சி க்கு அதிகாரிகளின் பட்டியலை அனுப்பவில்லை என்ற தகவல்கள் செய்தி ஊடகங்கள் வாயிலாக தெரியவருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சி தலைவர்களிடையே புதிய டிஜிபி யார்.? என்ற எதிர்பார்ப்பு சூட்டை கிளப்பியுள்ளது.
Related posts
Click to comment