எதிர் காலம் வரும்… என் கடமை வரும்.. இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன் கொள்கை எதிரி பாஜக..அரசியல் எதிரி திமுக – விஜய் பேச்சு..



தமிழக சட்டமன்ற தேர்தலை நெருக்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளது. இந்த வகையில் 2026 சட்டமன்ற தேர்தலை கூறி வைத்து, நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். 2026 – தேர்தலில் கூட்டணியின்றி தனித்து போட்டி என்று அறிவித்திருந்த விஜய் தனது இரண்டாவது மாநாட்டை மதுரையின் புறநகர் பகுதியான பாரபத்தியில் நடத்த திட்டமிட்டு, “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்ற கோஷத்துடன் தனது இரண்டாவது மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார்,
மதுரையின் புறநகர் பகுதியான பாரபத்தியில் சுமார் 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு,. இம்மாநாட்டில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. தொண்டர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. பெண்களின் வசதிக்காக ‘பிங்க் ரூம்’ என்ற சிறப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
மாநாட்டு திடல் முழுவதும் கட்சிக் கொடிகள் மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு விழாக்கோலமாக காட்சியளித்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.
மதுரை பாரபத்தில் நடைபெறும் தவெக மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கை பாடல் ஒலிபரப்பட்டது. உங்கள் விஜய், உங்கள் விஜய் உயிரென வரேன் நா” என்று தொடங்கும் விஜய் தனது சொந்த குரலில் பாடிய பாடல் ஒலிக்கப்பட்டது. உங்க விஜய் வரேன்” ‘’பெரியாரின் பேரன் வரான்!’’, ;’’எளியவர்களின் குரல்’’ போன்ற வரிகள் பாடலில் இடம்பெற்றிருந்தது.
30 ஆண்டுகளாக என்னை தாங்கி பிடித்தவர்களை நான் மறக்கமாட்டேன். என்னை சகோதரனாக நம்பும் சகோதரிகளின் குழந்தைகளுக்கு நான் தாய் மாமன் என மதுரை தவெக மாநாட்டில் விஜய் கூறிய போது ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய் பாஜக, அதிமுக, திமுக கட்சிகளை நேரடியாக கடுமையாக சாடினார். இதர அரசியல் கட்சிகளை மறைமுகமாக தாக்கி பேசினார். அரசியல் பார்வையாளர்களையும் விஜய் விமர்சித்தார்.
தொடர்ந்து, பாஜக அதிமுக கூட்டணியை பொருந்தா கூட்டணி என்று விமர்சித்தார். மேலும் எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சி இப்போது எப்படி இருக்கிறது என்று வெளியில் சொல்ல முடியாமல் அப்பாவி அதிமுக தொண்டர்கள் தவிக்கிறார்கள் என்று கூறினார்.
அடுத்ததாக அரசியல் ஆய்வாளர்கள் பக்கம் திரும்பிய விஜய், இந்த அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வது, இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டுமல்ல. மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டு பேசினார்.
பாஜகவை பாசிச பாஜக என்று குறிப்பிட்ட பேசிய விஜய், இலங்கை கடற்படையால் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்களை பிரதமர் மோடி மீட்டு கொண்டுவர வேண்டும் எனவும், கச்சத்தீவை மீட்டு கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பேசினார்.
நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவதால், தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும், இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி செய்யும் ஆட்சி பாஜக ஆட்சி. இதுதான் நீங்கள் நடத்தும் ஆசியா.? என்று பாஜகவை விமர்சித்து பேசினார்.
மாநாட்டில் பேசிக்கொண்டிருக்கும் போதே, எதிர் காலம் வரும்… என் கடமை வரும்.. இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன் என்ற பாடலை பாடிய விஜய், நம்முடைய ஒரே கொள்கை எதிரி பாஜக நம்முடைய ஒரே அரசியல் எதிரி திமுக. 2026 இல் இரு கட்சிகளுக்குத்தான் போட்டி ஒன்று திமுக மற்றொன்று தவெக. தவெகவிற்கு அடிமை கூட்டணி தேவையில்லை என்று அதிமுகவை மறைமுகமாக அடிமைக்கூட்டணி என்று விமர்சித்து பேசினார்.
ஒரு தவறு செய்தால் தெரிந்து செய்தால் அவர் கபட நாடக ஸ்டாலின் ஆகவே இருந்தாலும் கேட்பேன். ஸ்டாலின் அங்கிள் வாட் அங்கிள் இது ராங் அங்கிள்.. உங்களுக்கு மனசாட்சி இருந்தால் நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். நீங்கள் நடத்தும் ஆட்சியில் நேர்மை, நியாயம் உள்ளதா? ஊழல் இல்லாமல் உள்ளதா? சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளதா? பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?

டாஸ்மாக்கில் மட்டும் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடந்தது என சொல்கிறார்கள். மிஸ்டர் கிளீன் ரெக்கார்ட் உங்களுக்கும் உங்களுடன் இருப்பவர்களுக்கும் கொடுக்க வேண்டும். இதை பார்த்து வாயே இல்லாத ஊர்கூட வயிறு வலிக்க சிரிக்கிறது. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டும் போதுமா? படிக்க போகும் போதும் வேலைக்கு போகும் போதும் பாதுகாப்பு இல்லை என கதறுகிறார்கள். அந்த கதறல் சத்தம் உங்கள் காதில் கேட்கிறதா? இதில் உங்களை அப்பா என கூப்பிடுகிறார்கள் என்று சொல்கிறீர்கள்.

பெண்களுக்கு மட்டுமா பொய்யான வாக்குறுதி கொடுத்தீர்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், விவசாயிகளுக்கு பொய் வாக்குறுதி கொடுத்தீர்கள். பரந்தூரில் பாதிப்பு வராது என சொன்னீர்கள். போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்காமல் ஏமாற்றினீர்கள். எப்படி கேட்டாலும் பதில் வராது. இருந்தால் தானே.? செய்வோம்.. செய்வோம் என சொன்னார்களே செஞ்சாங்களா? சொன்னது எல்லாம் செஞ்சாங்களா?

பாசிக பாஜகவுடன் நேரடியாகவும் கூட்டணி இல்லை, மறைமுகமாகவும் கூட்டணி இல்லை. ஒரே அரசியல் எதிரி திமுக. ஒரே கொள்கை எதிரி பாஜக. தவெக நம்பி கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு தரப்படும் என்று விஜய் தெரிவித்தார்.
என்னுடைய அண்ணன் புரட்சித் தலைவர் விஜயகாந்த் உடன் பழகி இருக்கிறேன், அவரும் இந்த மதுரையை சேர்ந்தவர்தான், அவரை மறக்க முடியுமா? தமிழக அரசியலையே மாற்றும் மாநாடு இது, நாங்கள் எதிரிகள் சொல்லும் எதையும் காதில் போட்டுக்கொள்ள மாட்டோம், எல்லா கூக்குரலையும் சிரிப்போடு கடந்து வந்துள்ளோம் என்று மாநாட்டில் விஜய் கூறினார்.
எல்லா அரசியல்வாதியும் அறிவாளி கிடையாது . எல்லா சினிமாக்காரனும் முட்டாள் கிடையாது என மதுரை மாநாட்டில் விஜய் பேசினார்.
இம்மாநாட்டில் கட்சியின் எதிர்கால திட்டங்கள், தேர்தல் வியூகங்கள் மற்றும் கொள்கைகள் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிய அறிவிப்புகள் எதுவுமில்லை.
மதுரை மாநாடு நிறைவடைந்த நிலையில், தவெக தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கிளம்பினார். சாலைகளில் சாரைசாரையாக கிளம்பிய வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விஜய்யின் மாநாட்டு பேச்சு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.


அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘’தி.மு.க-வை வீழ்த்தும் ஒரே கட்சி அ.தி.மு.க மட்டுமே; அதிமுக யார் கையில் இருக்கிறது என சிலர் அறியாமையில் பேசுகிறார்கள்; தி.மு.க-வை வீழ்த்தும் சக்தியுள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே’’ என்று கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் எம்.பி.யுமான நடிகர் கமலஹாசன்
நான் ஒன்றும் மார்க்கெட் போன பிறகு, ரிட்டயர் ஆன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனோடு வந்துள்ளேன்,’’ எனத் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான நடிகர் கமலஹாசன் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது,
என்ன கருத்து சொல்வது. எனதுபெயரை சொல்லியுள்ளாரா? யார் பெயரையாவது சொல்லியுள்ளாரா? முகவரி இல்லாத கடிதத்துக்கு நான் பதில் போடலாமா? அவர் எனது தம்பி, என்று கூறியுள்ளார்.


பாஜக தமிழிசை
தாமரை இலையில் தண்ணீர் ஓட்ட வேண்டியதில்லை. தண்ணீரில் தாமரை மலரும். கொள்கை எதிரி பாஜக என்று கூறியுள்ளார். ஆனால் கொள்கை எது என்று சொல்லவில்லை. விஜய் பேச்சில் முதிர்ச்சி இல்லை. இது ஒரு நடிகரை பார்க்கவந்தா கூட்டம் என்று விமர்சித்துள்ளார்.


பிரேமலதா விஜயகாந்த்
த.வெ.க தலைவர் விஜயின் பேச்சை குறிப்பிட்டு தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், ‘’விஜய் எங்க வீட்டு பையன்தான். கேப்டனுக்கு தம்பி அவர் GOAT- படத்திற்கு அனுமதி கேட்டபோது கூட கொடுத்தோம்’’ என்று கூறினார்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
‘’யாராலும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. ஜெயலலிதா ஆக முடியாது.. பேரறிஞர் அண்ணாவாக முடியாது.. அ.தி.மு.க வாக்குகள் ஒருபோதும் எங்கும் போகாது. எங்கள் தலைவர் எம்.ஜி.ஆர் பெயர் சொல்லாமல், ஜெயலலிதா பெயர் சொல்லாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது’’ என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


banner

Related posts

உங்கள் மீதான குற்றச்சாட்டை நீங்களே விசாரிப்பது என்பது எந்த வகையில் நியாயம்?” வஞ்சிநாதன்..

Admin

கலைஞர் பல்கலை. மசோதா.. குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி

Ambalam News

தமிழகம் வருகை தரும் மோடியை மு.க. ஸ்டாலின் சந்திப்பாரா.?

Admin

Leave a Comment