ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால் அமெரிக்க டாலர் மதிப்பு சரிந்தது.. ஜப்பானின் கரன்சியான ‘யென்’ அமெரிக்க டாலரை முந்தியது



அமெரிக்கா உலக நாடுகளை வரிகள் மூலம் அச்சுறுத்தி வந்தநிலையில், தற்போது டாலர் விஷயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகிறது. குறிப்பாக ஜப்பானை தனது வரி விதிப்பின் வாயிலாக திணறடித்தது. இந்த விரி விதிப்பின் வாயிலாக அமெரிக்க அரசுக்கு அதிக அளவில் நிதி வந்து கொண்டிருப்பதாக கூறி டிரம்ப் பெருமையோடு கூறியிருந்தார். மேலும் இதுவே சரியான நடவடிக்கை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஜப்பான் பெரிதாக பொருளாதாரத்தில் வளர்ந்து விடவில்லை. எனவேதான், பணவீக்க அபாயத்தை சமாளிப்பதில் பேங்க் ஆஃப் ஜப்பான் ‘பின் தங்கியுள்ளது என்று அமெரிக்கர்கள் கூறியிருந்தனர். ஆனால் ஜப்பான் அமெரிக்கர்களின் கூற்றை பொருட்படுத்த வில்லை. முயற்சி திருவினையாக்கும் என்ற அடிப்படையில், ஜப்பானின் பொருளாதாரம் இரண்டாம் காலாண்டில் எதிர்பார்ப்பதை விட வேகமாக வளர்ச்சி அடைய வைத்தனர். எனவே ஜப்பானின் கரன்சியின் மதிப்பு எதிர்பார்த்ததைவிட அதிகமாக உயர்ந்தது.
இந்த வளர்ச்சி காரணமாக, அமெரிக்க டாலருக்கு எதிராக ஜப்பான் கரன்சியான ‘யென்’ 0.4%, யூரோ 0.25% என வளர்ச்சியடைந்துள்ளது. அதேபோல இங்கிலாந்து கரன்சியான பவுண்டும், ஆஸ்திரேலிய டாலரும் மதிப்பு அதிகரித்திருக்கிறது. இப்படியாக அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து சரிந்துள்ளது.
அமெரிக்க டாலரின் இந்த சரிவுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணமாக கூறப்படுவது, டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கை என்றே கூறப்படுகிறது. நட்பு நாடுகள் என்றுகூட பார்க்காமல் ஜப்பான், இங்கிலாந்து என அனைத்து நாடுகளுக்கும் டிரம்ப் வரி விதித்தார்.
டாலரின் மதிப்பு குறைந்த நிலையில், அமெரிக்காவில் முதலீடுகள் குறைய ஆரம்பித்தது. டாலரை நம்புவதை விட, தங்கத்தையும் இதர கரன்சியையும்தான் முதலீட்டாளர்கள் நம்ப தொடங்கினார். இப்படியாக அமெரிக்காவின் டாலர் மதிப்பு தொடர்ந்து சரிய தொடங்கியது. முதலீடுகள் குறைந்த காரணத்தால் அமெரிக்காவில் பணவீக்கம் ஏற்பட்ட தொடங்கியது. நிலையை கட்டுக்குள் கொண்டுவர, அமெரிக்காவின் ரிசர்வ் வங்கியானது வட்டி விகித குறைப்பு நடவடிக்கையை எடுத்தது. வட்டி அதிகமாக இருந்தால் மட்டுமே முதலீடுகள் வரத்தொடங்கும். இந்த நடவடிக்கையும் பலனளிக்கவில்லை, எனவே டாலரின் மதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.
உலகின் மிகவும் மதிப்புமிக்க கரன்சியாக கருதப்பட்ட அமெரிக்க டாலர் சரிவடைந்திருக்கிறது. குறிப்பாக ஜப்பானின் கரன்சியான ‘யென்’ அமெரிக்க டாலரை முந்தி மதிப்பு மிக்க கரன்சியாக மாறியிருக்கிறது.
ட்ரம்பின் நடவடிக்கையால் அமெரிக்க டாலர் மதிப்பு சரிந்து பொருளாதாரம் கேள்விக்குறிக்கு உள்ளாகி இருக்கிறது.


banner

Related posts

தேர்தல் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

Admin

தமிழக தீயணைப்பு ஆணைய தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்

Ambalam News

கடலூர் ரயில் தண்டவாளத்தில் பள்ளி வாகனம் கவிழ்ந்து 6 மாணவர்கள் படுகாயம்..

Ambalam News

Leave a Comment