தொழிலதிபர் புகார் : நடிகை ஷில்பா ஷெட்டி மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு


நடிகை ஷில்பா ஷெட்டி அவரது கணவருமான ராஜ்குந்த்ராவும் பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் எனும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் இயக்ககுனர்களாக இருந்து வந்தனர். இந்த நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்காக ஷில்பா ஷெட்டியும், ராஜ்குந்த்ராவும் ஜுகுவைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோத்தாரியை அணுகியுள்ளனர். அவரிடம் 2015 – 2024 ஆகிய 9 வருட காலத்தில்,மொத்தமாக ரூ.60.4 கோடி ரூபாயை கடனாக வாங்கி உள்ளனர்.
ஆனால், கடனை வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை. இந்நிலையில், ஷில்பா ஷெட்டி 2016 ல் நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார். பின்னர், அந்நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதனை கடன் வழங்கிய கோத்தாரியிடம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து தொழிலதிபர் கோத்தாரி, ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவருக்கு எதிராக ஜுகு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
தொழிலுக்காக வாங்கிய பணத்தை இருவரும் தங்களது சொந்த செலவீனங்களுக்காக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். அதன் பேரில், ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.


banner

Related posts

எடப்பாடி முதுகில் குத்தி விட்டதாக நான் சொல்லவில்லை.. ஊடகங்கள் தவறான செய்தியை பரப்புகிறது – பிரமலதா விஜயகாந்த்

Ambalam News

தவெக விஜய்க்கு சிபிஐ சம்மன் | விரைவில் ஆஜராக உத்தரவு.? பின்னணி என்ன.?

Ambalam News

பட்டியலின அதிகாரியை காலில் விழ வைத்த கொடுமை : 5 பேர் மீது வழக்குப்பதிவு

Ambalam News

Leave a Comment