எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்



மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் நடந்த குளறுபடி மற்றும் பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கண்டித்து, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து, தேர்தல் ஆணையம் நோக்கி ‘இந்தியா’ கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
ராகுல் காந்தி தலைமையில் நடந்த இந்தப் பேரணியில் திமுக, திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட 25 கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தவெக தலைவர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது, கடும் கண்டனத்திற்குரியது” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுளார்.


இது குறித்து தவெக தலைவர் விஜய், தனது எக்ஸ் பக்கத்தில், சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, “நம் நாடு முழு வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.
அப்படி ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தல்” (Free and Fair Election) என்று அப்பொழுதே ஆணித்தரமாகத் தெரிவித்திருந்தோம். அத்தோடு, தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தோம்.
மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதும், அந்த நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் என்று, தமிழ்நாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம்தான் முதன்முதலாகக் குரல் எழுப்பியது. ஏற்கெனவே நாம் கூறியது போல, அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் (Free and Fair Election) நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


banner

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய நாகேந்திரனுக்கு கல்லீரல் பாதிப்பு.? மருத்துவ ஆய்வு மேற்கொள்ள வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Ambalam News

மத்திய அரசுக்கு எதிராக, ஓ.பி.எஸ் திடீர் கண்டன அறிக்கை

Admin

“பாஜகவுக்கு நோ-என்ட்ரி – திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

Ambalam News

Leave a Comment