‘’சொசைட்டி பரிதாபங்கள்’’ வீடியோ விவகாரம் – நடிகர் தாடி பாலாஜி ஆதரவு



கோபி, சுதாகர் இருவரும் பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது, சமூக மோதலை தூண்டும் விதமாக வீடியோ வெளியிட்டதாக இரு தினங்களுக்கு முன்பு கோவை போலீசில் வழக்கறிஞர் ஒருவர் புகாரளித்துள்ளார்.
நெல்லையில் நடந்த ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை தொடர்பாக கோபி மற்றும் சுதாகர் நடத்தி வரும் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் ‘’சொசைட்டி பரிதாபங்கள்’’ என்ற பெயரில் கவின் ஆணவக்கொலை தொடர்பான ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த வீடியோ சமூக மோதலை தூண்டும் விதமாக இருப்பதாக, கோவை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் கார்த்திக் தனுஷ்கோடி என்பவர் நடவடிக்கை கோரி புகார் அளித்துள்ளார்.

நெல்லையில் அண்மையில் இரு குடும்பங்களிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஐடி ஊழியர் கவின் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் இரு குடும்பங்களுக்கிடையான பிரச்சனையாகும்.
ஆனால் இந்த பிரச்சினையை இரு சமூக மோதலாக கோபி, சுதாகர் ஆகியோர் சொசைட்டி பரிதாபங்கள் என்ற பெயரில் ஒரு வீடியோவை தயாரித்து யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோவில் இரு சமுதாயங்களுக்கு இடையே மோதலை தூண்டும் வகையிலும், இந்த சமுதாயங்களை கேலி செய்யும் வகையிலும் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது. மேலும், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் அடையாளங்களை அந்த வீடியோவில் குறிப்பிட்டு அந்த சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி உள்ளனர்.


எனவே, இந்த வீடியோவை யூடியூப்பில் இருந்து நீக்க வேண்டும். மேலும், இதுபோன்று சர்ச்சைக்குரிய வகைகள் வீடியோக்களை வெளியிடாத வகையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வீடியோவில் மிளகாய்பொடி தூவிதானே வெட்டுன.? அவரிடமே அரிவாளை கொடுத்து வெட்ட சொல்ல வேண்டியது தானே.? போன்ற சமூக மோதலை தூண்டும் வசனங்கள் இடம்பெற்றுள்ளது.

யூடியூப்பில் இருந்து இந்த வீடியோவை நீக்க வேண்டும் இந்த வீடியோவில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை மட்டுமே குறிவைத்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இரு குடும்பங்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு பெரும்பான்மை சமுதாயத்தை மட்டுமே குறிப்பிட்டு வீடியோவில் பல இடங்களில் கேலி செய்துள்ளனர். ஐ.டி சட்டத்தின்படி கோபி, சுதாகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரணை நடைபெறுவதாக தெரிகிறது.

இந்த வீடியோ குறித்து அங்கொன்றும், இங்கொன்றுமாக சில எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில் நடிகர் தாடி பாலாஜி பரிதாபங்கள் யூடியூப் சேனல் கோபி, சுதாகருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.


banner

Related posts

அஜித் குமார் ‘’லாக்கப் டெத்’’ வழக்கு – தனிப்படை போலீசாரை சி.பி.ஐ கஷ்டடியில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Ambalam News

ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால் அமெரிக்க டாலர் மதிப்பு சரிந்தது.. ஜப்பானின் கரன்சியான ‘யென்’ அமெரிக்க டாலரை முந்தியது

Ambalam News

ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல்.!

Ambalam News

Leave a Comment