நெல்லையில் பட்டியலின இளைஞர் வெட்டிக் கொலை; ஆணவக் கொலையில் சிக்கிய உதவி ஆய்வாளர் குடும்பம்?


நெல்லையில் நேற்று காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கவின் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில், இது ஆணவக்கொலையா.? என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்திருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் என்ற உரை சேர்ந்தவர் சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயியான இவருக்கு 26 வயதான கவின்குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறர். இந்நிலையில், சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்த கவின்குமார், உடல்நிலை சரியில்லாத அவரது தாத்தாவை சிகிச்சக்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு சித்த மருத்துவமனைக்கு அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.

தனது தாத்தாவுக்கு சிகிச்சை அளிக்ககப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அவர் வெளியில் காத்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கவின்குமாரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்ற நிலையில், தெருவில் வைத்தே அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை போலீசார், உயிரிழந்து கிடந்த கவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து , அந்த பகுதியில் விசாரணையை தொடங்கிய போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் யார் என்பது குறித்த தகவல் கிடைத்தது.

பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்த உதவி ஆய்வாளர் சரவணன் என்பவரின் மகன் 24 வயது மகனான சுர்ஜித் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், சுர்ஜித்தின் தாய் தந்தை இருவருமே காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், தாயார் கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வருவது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சுர்ஜித்தை சில மணி நேரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததாக கூறப்படுகிறது. மேலும், எதற்காக கொலை செய்தார்? என்பது குறித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது கொலையாளி சுர்ஜித் கொடுத்த வாக்குமூலம் கேட்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதில், எனது அக்காவும், கவினும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி பருவத்தில் இருந்தே ஒன்றாக படித்தனர். அவர்கள் 2 பேரும் ஒன்றாக பழகி வந்தனர். அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எனது அக்காவுடன் அவர் பேசுவது எனக்கு பிடிக்கவில்லை. இதனிடையே எனது அக்கா பாளையகோட்டையில் உள்ள ஒரு தனியார் சித்த மருத்துவ மையத்தில் வேலை பார்த்து வந்தார். அடிக்கடி சிகிச்சைக்காக யாரையாவது அங்கு அழைத்துச் சென்று கவின் பேசி பழகி வந்தார். இதனை நான் பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை.

இந்நிலையில், நேற்றும் அதேபோல் மருத்துவமனைக்கு அவர் செல்வதை அறிந்து கொண்ட நான், அவரை பின்தொடர்ந்து சென்றேன். பின்னர் அவரை தனியாக அழைத்து எச்சரிக்கை விடுத்தேன். ஆனால் அவர் பேசுவதை நிறுத்தமுடியாது என்று கூறியதால் ஆத்திரத்தில் வெட்டிக்கொலை செய்தேன். “ என்று அந்த வாலிபர் கூறியிருக்கிறார்.

இதையடுத்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் சுர்ஜித் மீது கொலை, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இதனிடையே கொலை சம்பவத்திற்கு சுர்ஜித்தின் தாய்-தந்தை தான் காரணம் என்றும், அவர்களின் துண்டுதான் பெயரிலேயே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது அவர்களையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கவேண்டும் என்றும் பல்வேறு அமைப்பினர் பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்தினருடன் சென்று புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையிலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், உயிரிழந்த கவின் பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் கவினை சுர்ஜித் சகோதரி காதலித்தாரா? இது ஆனவக்கொலையா.? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சுர்ஜிதின் சகோதரியும் கவினும் காதலித்திருக்கும் பட்சத்தில் இது ஆணவக் கொலையாக மாற வாய்ப்பு உள்ளது.

கைது செய்யப்பட்ட சுர்ஜித் சகோதரியிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது. விசாரணைக்கு பிறகு இது தொடர்பான முழுமையான விவரங்கள் தெரிய வரும் என திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.


banner

Related posts

‘’உங்களுடன் ஸ்டாலின்’’ முகாமில் அதிகாரிகளுடன் அடிதடி – சிகிச்சையில் இருப்பவரை கைது செய்ய போலீஸ் தீவிரம்.?

Ambalam News

ஆப்கானிஸ்தனில் நிலநடுக்கம் 800 பேர் பரிதாப பலி.. 2500 பேர் படுகாயம்.. இந்தியாவின் சில பகுதிகளிலும் நில அதிர்வு.!

Ambalam News

மத்திய கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து 3 கோடியை சுருட்டிய வங்கியின் மேலாளர் கைது

Ambalam News

Leave a Comment