நாடு முழுவதும் நாளை பொது வேலை நிறுத்தம்.. பேருந்துகள் இயங்குமா.?



மத்திய மாநில அரசு ஊழியர் சங்கங்கள் ஒன்றிணைந்து நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பேருந்துகள் ஆட்டோக்கள் இயங்குமா என்ற கேள்வி மக்கள் எழுந்துள்ளது.
17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெறுகிற உள்ளது.
தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு திமுகவின் தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., உள்ளிட்ட 13 தொழிற்சங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆளுங்கட்சியான திமுகவின் தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பேருந்துகள் நாளை இயக்கப்படாது எனத் தெரிகிறது.
அதேநேரம், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. எனவே, அந்த தொழிற்சங்க பணியாளர்கள் வழக்கம்போல் பணிக்கு வருவார்கள். இதனால், குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
சி.ஐ.டி.யு.வில் ஆட்டோ தொழிலாளர்கள் அதிகளவில் அங்கம் வகிப்பதால் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடுவதற்கு வாய்ப்பில்லை. வணிகர் சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு இதுவரை ஆதரவு தெரிவிக்காததால், கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும். நாடு தழுவிய இந்த போராட்டத்தில் வங்கித் துறையும், காப்பீட்டு துறையும் இணைய முன்வந்துள்ளது குறிப்பிடதக்கது


Related posts

தனிப்படைகளை கலைக்க.? போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு!

Admin

பொன்முடியின் ஆபாச பேச்சு.. அமைச்சர் பதவியை பறிக்க தீவிரம் காட்டும் முதல்வர்..

Admin

காஞ்சிபுரம் ஏரியில் மூழ்கிய கல்லூரி மாணவர் மரணம்

Admin

Leave a Comment