திருச்சி RTO தற்கொலை – பகீர் பின்னணி.. RTO மனைவியுடன் ஆணவ தற்கொலை.?



சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்ற பாரதியின் வரிகளும் சமத்துவ கருத்துக்களும் இன்று வரை ஏட்டளவிலேயே தான் இருக்கிறதோ என்று சில சம்பவங்கள் அவ்வப்போது நமக்கு நினைவூட்டி செல்கிறது.
படிக்காதவர்கள் படித்தவர்கள் என்று எந்த பாகுபாடும் இன்றி அனைவரின் மனதிலும் பாகுபாடின்றி பரவிக்கிடக்கிறது சாதிய ஆணவம் எனும் விஷம் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்து நவீன யூகத்திலும் அழிக்கமுடியாத இந்த வர்ணாசிரம கோட்பாடு இன்னும் எத்தனை ஆயிரம் உயிகளை பழி கேட்குமோ என்ற அச்சம் இந்த சமத்துவ நீதி காலத்திலும் நம் முன் நிற்கிறது.


சட்டம் இரும்புக்கரம் கொண்டு அடக்கினாலும் இந்த சாதிய வேறுபாடுகள் வேகமாக பரவிக்கொண்டுதான் இருக்கிறது. அரசியல் ஆதாயங்களுக்காக சிலர் சாதீய நெருப்பை பற்றவைத்து குளிர்காயும் அவலங்களும் இன்றுவரை தொடரத்தான் செய்கிறது.
மெத்தபடித்தவர்களும் உயர் பதவிகளில் அதிகார மையங்களில் மக்களுக்காக பணிபுரியும் அதிகாரிகளும் அரசியல் பிரபலங்களும் கூட தங்களது பெயரோடு சாதீய அடையாளத்தை சுமந்து கொண்டுதான் நிற்கின்றனர்.


காதல் விவகாரங்களில் நடக்கும் ஆணவக்கொலைகள் தற்கொலைகள் அவ்வப்போது நம்மை பதறவைத்துக் கொண்டுதான் இருக்கிறது.
கொங்கு மண்டலத்தில் அவ்வப்போது சாதிய படுகொலைகளை கண்டு நாம் பதறி இருக்கிறோம்.இன்று வரை நீதிமன்றங்களில் சாதீய படுகொலை குறித்த வழக்குகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.


படிக்காத அல்லது சாதி வெறி பிடித்த சமூக பொறுப்பற்ற சிலரின் மனோபாவத்தை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் மெத்த படித்து அதிகார பொறுப்பில் இருக்கும் உயர் அதிகாரிகளே சாதீய கோட்பாடுகளில் ஊறி தனக்கு இணையான மாற்று சாதிகளே இல்லை என்ற மனநிலையில் வாழ்கிறார்கள் என்பதை அறியும்பொழுது இன்னும் எத்தனை பெரியார்கள் அம்பேத்கர்கள் வந்தாலும் சாதி மத பாகுபாடற்ற சமுதாயத்தை கட்டி எழுப்ப முடியாதோ என்ற கேள்வி எழுகிறது.


சாதிய பிரச்சனைக்கும் RTO சுப்ரமணியம் தற்கொலைக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியும் குழப்பமும் நியாயமானதுதான். RTO சுப்ரமணியம் மனைவியுடன் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதை பார்ப்போம்.
திருச்சி வட்டாரப்போக்குவாரத்து துறை பறக்கும் படையில்என்போர்ஸ்மெண்ட் பிரிவில் RTO வாக பணியாற்றி வந்தவர் சுப்ரமணியம் இவரது மனைவி பிரமிளா இவர் மோகனூர் அருகே உள்ள ஆண்டாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஆதித்யா (21) என்ற மகனும் சம்யுக்தா (25) என்ற மகளும் இருக்கின்றனர்.


இந்நிலையில், சுப்ரமணியம் மற்றும் அவரது மனைவி பிரமிளா ஆகிய இருவரும் நாமக்கல் அருகே உள்ள வகுரம்பட்டி பகுதி அருகே ரயில் முன் பாய்ந்து கொடூரமான முறையில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இவர்களது உடலை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா (பொ) கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு அதிகாரியின் தற்கொலை சம்பவம் என்பதால் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பான புலன்விசாரணையை தொடங்கினோம்.,
RTO அதிகாரியின் இந்த தற்கொலை சம்பவத்தின் பின்னணியில் அரசியல் தொடர்பான அழுத்தங்கள் துறை ரீதியான நெருக்கடிகள் உயர் அதிகாரிகளின் நெருக்கடிகள் கடன் தொல்லைகள் இப்படி பல கோணங்களிலும் நமது விசாரணையை தொடங்கினோம்.
RTO சுப்ரமணியம் பணியாற்றிய வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள் சிலரிடம் விசாரித்த போது RTO சுப்ரமணியம் மிகவும் நல்ல மனிதர் அன்பானவர் பண்பானவர் மிகவும் நல்லவர் துறை ரீதியாக அவருக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு பிரச்சனைகள் கிடையாது என்றே கூறினர்.


நாம் விசாரணையை தொடர்ந்து தீவிரப்படுத்திய நிலையில், திருச்சி RTO தற்கொலை ஏன்.? என்ற கேள்விக்கு சாதிதான் அவரை தன் மனைவியோடு சென்று தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்ய தூண்டியிருக்கிறது என்பதை அறிந்த போது நாம் பதறி விட்டோம்.
RTO சுப்ரமணியம் குடும்பத்தினர் கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் அவரது மனைவி அரசுப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
பி.இ படித்த இவரது மகள் சம்யுக்தா சாதிய கட்டமைப்பில் தாழ்தப்பட்ட சமூகம் என்று வர்ணிக்கப்படும் ஒரு பிரிவை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவரை பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த காதலை அறிந்த RTO சுப்ரமணியம் மற்றும் அவரது மனைவி பிரமிளா மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்கொலை சம்பவம் நடப்பதற்கு முன் குடுபத்தில் இந்த காதல் குறித்து எழுந்த பிரச்சனையின் போது RTO சுப்ரமணியத்தின் மகள் சம்யுக்தா தனது காதல் குறித்த விவகாரத்தில் கும்பத்தினரின் அறிவுறுத்தலை ஏற்காமல் தனது முடிவில் உறுதியாக இருந்ததாக தெரிகிறது.
மகளின் இந்த முடிவால் மனமுடைந்த RTO சுப்ரமணியம் மற்றும் அவரது மனைவி இருவரும் தற்கொலை முடிவுக்கு வந்துள்ளனர்.


நவீன உலகத்திலும் சாதி ஆதிக்க மணப்பான்மையால் RTO சுப்ரமணியம் மற்றும் அவரது மனைவி பிரமிளா தம்பதியினர் கடந்த 06.07.2025 அன்று தற்கொலை செய்து மாண்டிருக்கின்றனர். நல்ல மனிதர்கள் என்று பெயரெடுத்தவர்கள் தான் சார்ந்த சாதிக்கும் அந்தஸ்திற்கும் பங்கம் வந்துவிட்டதாக அஞ்சி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தீண்டாமை ஒரு பாவச்செயல் தீண்டாமை ஒரு பெருங் குற்றம் என்பதை இவர்களை போன்றவர்கள் புரிந்து கொள்ள இன்னும் எத்தனை காலங்கள் நாம் காத்திருக்க வேண்டுமோ.? தெரியவில்லை
-விஜி


Related posts

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்த இராமநாதபுரம் ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்

Admin

மண்டல தலைவர்கள் ராஜினாமா.? முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

Ambalam News

பொன்முடியின் ஆபாச பேச்சு.. அமைச்சர் பதவியை பறிக்க தீவிரம் காட்டும் முதல்வர்..

Admin

Leave a Comment