ரூ.300 கோடிக்கு ட்ரோன் ஆர்டர் கொடுத்த இந்திய ராணுவம்! சூடு பிடிக்கும் ட்ரோன் சந்தை


பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வாயிலாக பாகிஸ்தானுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் ட்ரோன்களின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது. தான் காரணமாக ட்ரோன் சந்தை வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கு பின் ட்ரோன்களையும், ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு கருவிகளையும் வாங்குவதில் இந்திய ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது. அதை உறுதி படுத்தும் விதமாக ஏறக்குறைய 300 கோடி ரூபாய்க்கு ட்ரோன்களை வாங்குவதற்கு இந்திய ராணுவம் ட்ரோன் நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி 26 பேரை கொடூரமாக கொன்று குவித்தனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற அதிரடி நடவடிக்கையைத் தொடங்கி பாகிஸ்தான் எல்லையில் முகாமிட்டிருந்த இருந்த 9 தீவிரவாதிகளின் முகாம்களை அழித்தது. இந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் அதிக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பின்னர் இந்தியாவின் ட்ரோன் சந்தை வளர்ச்சியை நோக்கிச் சென்றுள்ளது. தற்போது ஏறக்குறைய 300 கோடி ரூபாய்க்கு ட்ரோன்களை வாங்குவதற்கு இந்திய ராணுவம் ஆர்டர் கொடுத்துள்ளது. இதில் சோலார் டிஃபென்ஸ் அண்ட் ஏரோ ஸ்பேஸ் என்ற நிறுவனத்திடம் 158 கோடி ரூபாய்க்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் இரவிலும் இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை பெற்றவை.

கண்காணிப்பு, செங்குத்தாக கிளம்பி தரையிரங்கும் ஆற்றல், அதிக தூரம் பாய்தல் ஆகிய அம்சங்களை கொண்ட ட்ரோன்களை தயாரிக்கும் ஐடியா ஃபோர்ஜ் டெக்னாலஜி என்ற நிறுவனத்திடம் 137 கோடி ரூபாய்க்கு இந்திய ராணுவம் ஆர்டர் செய்துள்ளது. 2023-ஆம் ஆண்டு 23 ஆயிரத்து 048 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த இந்திய ட்ரோன் சந்தை, 2030-ஆம் ஆண்டு சுமார் 8 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.


Related posts

கோவில் காவலாளியை அடித்து கொன்ற போலீஸ் – 18 இடங்களில் கொடுங்காயம் அதிரவைக்கும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்

Admin

முருகன் மாநாடு: எடப்பாடி பழனிச்சாமி மீது முன்னாள் அமைச்சர்கள் அதிருப்தி.! அதிமுகவில் நடப்பது என்ன?

Admin

ராபர்ட் புரூஸுக்கு எதிரான தேர்தல் வழக்கு: நயினார் நாகேந்திரனிடம்1 மணி நேரம் குறுக்கு விசாரணை

Admin

Leave a Comment