கள்ளக்குறிச்சி | சட்டவிரோத கருக்கலைப்பு – மருந்தக உரிமையாளர் உட்பட 4 பேர் அதிடி கைது
சங்கராபுரம் அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட மருந்தக உரிமையாளர் உட்பட நான்கு பேரை கைது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தில் அருண் மருந்தகம் என்ற பெயரில் தனியார் மருந்தகம் இயங்கி வருகிறது.
இந்த மருந்தகத்தின் உரிமையாளரான சேட்டு என்பவர், டி-ஃபார்ம் படித்துவிட்டு மூன்று வருடமாக மருந்தகம் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது மருந்தகம் ஆரம்பித்த புதிதில் ஆண்மை குறைவு நிவர்த்தி மருந்துகள் குழந்தை பாக்கியம் பெற நாட்டு மருந்து கிடைக்கும் என ஆரம்பித்த இந்த தனியார் மருந்தகத்தில் தற்போது சட்டவிரோதமாக பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சங்கராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல்.? கிடைத்ததன் அடிப்படையில், சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் பிரபு மற்றும் சங்கராபுரம் தனிப்பிரிவு காவலர் இளந்திரையன் ஆகியோர் நேரில் சென்று சோதனை செய்துள்ளனர்
அப்போது கருக்கலைப்பு செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் மருந்து மாத்திரைகள் இருந்தது தெரியவந்துள்ளது மேலும் மருந்தகத்திற்கு வந்த பெண்கள் மற்றும் ஆண்களிடம் விசாரணை செய்துள்ளார்கள்
குற்றச் சம்பவம் உறுதியான நிலையில் மருந்தகத்தின் உரிமையாளரான சேட்டு என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவருக்கு உதவியாக இருந்தது தெரியவந்துள்ளது மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சங்கராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுபோன்ற கருக்கலைப்புச் சம்பவம் நடந்து வரும் நிலையில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
போலீசார் மருந்தக உரிமையாளரிடம் மேற்கொண்ட விசாரணையில் பெண்ணின் வயிற்றில் இருப்பது ஆணா பெண்ணா என தெரிந்து கொள்ள 15000 வசூல் செய்வதாகவும், பெண் குழந்தை உள்ளது என தெரிய வந்தால் கருக்கலைப்பு செய்வதற்கு லட்ச கணக்கில் பணம் வசூல் செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது
இவ்வளவு காலமாக காவல்துறைக்கும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் தெரியாமல் இந்த குற்ற சம்பவம் நடந்து வந்திருக்கிறது என்பதை நம்ப மறுக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்
தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் ஸ்கேன் சென்டர்களை ஆய்வு செய்ய வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்
கள்ளக்குறிச்சி விழுப்புரம் விருத்தாசலம் போன்ற பகுதிகளில் உள்ள மருத்துவமனை கருத்தரிப்பு மையங்கள், மருந்தகங்கள், ஸ்கேன் சென்டகளை தமிழக அரசு கவனிக்குமா.?