அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்துவதைபோல் “Thug Life” Story போட்ட நிலையில், அமைச்சருக்கு எதிராகப் வெடித்த விவகாரம் காட்டுத் தீயாக பரவி வருகிறது. எதிர்க்கட்சியான திமுக உட்பட தவெக தவிர்த்து அனைத்து கட்சியினரும் அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர். இதை தொடர்ந்து திமுக மாணவர் அணியினர் அறவழியில் போராட அனுமதி கோரியிருந்தனர். காவல்துறை அனுமதியை மறுத்துவிட்டது. இதன்காரணமாக திமுகவினர் போராட்டத்தில் குதித்து தவெக அரசுக்கும் முதல்வர் விஜய்க்கும் எதிராக கோஷங்களை எழுப்பி போராட்ட தொடங்கினர். இதன்காரணமாக திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திமுக மானவரணியினரின் அறவழிப் போராட்டத்தை ஏன் தவெக அரசு தடுக்கிறது. அவர்கள் போராட்டத்திற்கு அனுமதி கேட்ட நாளில் அனுமதி வழங்க முடியாது என்றால் மற்றொரு தேதியை கேட்கும்படி கூறியிருக்கலாமே.? என்ற கேள்விகளை வீசுகின்றனர்.
அது போதைப்பொருள் பயன்படுத்தும் முறைதான் அது போதைப்பொருளேதான் என்கின்றனர் விபரமாறிந்த நெட்டிசன்கள். மேலும் அமைச்சர் சரத்குமாரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்கின்றனர். அப்பட்டமாக உண்மையை மறைக்க தவெக அரசு முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். எதிர்கட்சிகளின் போராட்டத்தை முடக்கி ஜனநாயகத்தின் குரல்வலையை நெரிக்கும் தவெக அரசின் அரசியல் எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத அரசியல்.
திமுகவினர் கைது தொடர்பாக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் தனது பதிவில்,

போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது! த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு! முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு! இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது! அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம்
புகட்டுவார்கள்! என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை தொடர்ந்து, திமுக ஐடி விங் பதிவில்..,
இதற்குப் பெயர் பாசிசமா இல்லை பாயாசமா தொடைநடுங்கி முதல்வரே?!
பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக அப்பட்டமாக வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அறவழியில் அமைதியான முறையில் போராடத் தயாரான திமுக மாணவர் அணியினருக்கு அனுமதி மறுத்து, அவர்களைக் கைது செய்திருக்கும் தவெக அரசின் இந்த அராஜகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
உங்களின் ‘Thug Life’ அமைச்சர்களின் வண்டவாளங்களைத் தோலுரித்தால் ஏன் இந்த அளவுக்குக் கை நடுங்கி, தொடை நடுங்கிப் போய் போலீஸுக்குப் பின்னால் ஒளிகிறீர்கள்?
ஜனநாயக ரீதியான ஒரு அமைதிப் போராட்டத்தைக் கூட எதிர்கொள்ளத் துணிவில்லாத ஒரு கோழை அரசாங்கம் தமிழ்நாட்டை ஆள்வது வெட்கக்கேடு!
அதிகார வெறி கொண்டு நீங்கள் போடும் இந்த சர்வாதிகார ஆட்டத்திற்குத் தமிழ்நாட்டு இளைஞர்களும், மக்களும் வீதியில் இறங்கி மிக விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்! என்று கூறப்பட்டுள்ளது.
திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தனது பதிவில்..,

பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, கழகத்தினரை அராஜகமாக கைது செய்திருக்கிறது தவெக அரசு.
தங்களை தாங்களே ஜனநாயகசக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது.
கைது செய்யப்பட்ட திமுகவினரை உடனடியாக விடுதலை செய்வதோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், போராட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுகவினர் ரீலஸ் போட்டு VIBE செய்த ரீலஸ்கள் இணயத்தில் வலம் வந்து திமுகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது
மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் போதை பொருளை பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் அவரை முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளன. சமூக பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், அமைச்சரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் முதல்வர் போராட்டத்தையே தடுக்க காவல்துறையை பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு அழகல்ல. ஜனநாயகத்தின் குரல்வலையை நெறிக்கும் தவெக அரசின் செயலை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
தவெக அரசின் இந்த ஜனநாயக விரோதப் போக்கு முற்றிலும் கண்டிக்கத்தக்கது. எதிர்கட்சிகளின் கேள்விக்கு முதல்வர் விஜய் முறையாக பதிலளிக்க வேண்டும்.
– மு. அனந்த்
–

