எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கல் | குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா் – CSCID ஆய்வாளா் ராஜசேகர் நடவடிக்கை.. 206 எரிவாயு சிலிண்டா்கள் பறிமுதல் ஒருவர் கைது..


திருப்பூரில் தனியார் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 206 எரிவாயு சிலிண்டா்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து பதுக்கிய மோகன் என்ற குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் போா் காரணமாக நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக மக்கள் அவதியுற்று வருகின்றனர். எரிவாயு தட்டுப்பாடான சூழலில் பல இடங்களில் சிலா் எரிவாயு சிலிண்டா்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கின்றனா்.

இந்த நிலையில், திருப்பூா் சிறுபூலுவப்பட்டியை அடுத்த தாய்மூகாம்பிகை நகரில் உள்ள ஒரு கிடங்கில் சிலிண்டா்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை இரவு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.

இதன்பேரில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சரவணன், திருப்பூா் வடக்கு குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா் ராகவி ஆகியோா் தலைமையில் அதிகாரிகளும், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு ஆய்வாளா் ராஜசேகா் தலைமையில் போலீஸாரும் அந்த கிடங்கிற்குச் சென்று சோதனை நடத்தினா்.

அதிகாரிகள் நடத்திய சோதனையில் அங்கு வணிக மற்றும் வீட்டு பயன்பாட்டு சிலிண்டா்கள் என மொத்தம் 206 சிலிண்டா்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த சிலிண்டா்கள் அனைத்தும் தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதும், மோகன் என்பவா் உரிமையாளா் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் சிலிண்டா்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனா். மோகனிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


banner

Related posts

மகளின் காதலனை ஆணவக்கொலை செய்த தாய்.? மயிலாடுதுறையில் பயங்கரம்..

Ambalam News

தெரு நாய்களுக்கு தடுப்பூசி – சென்னை மாநகராட்சி புதிய திட்டம்.. நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை..

Ambalam News

இப்படியாம்மா பண்ணுவ.!? சீட்டிங் வழக்கில் சிக்கிய ஷில்பா ஷெட்டி தனது நிறுவனத்தை மூடினார்

Ambalam News

Leave a Comment