எரிவாயு தட்டுப்பாடு | ”கோவிட் காலத்தைப் போல” என பிரதமர் பேசியதால் மக்கள் பீதிக்குள்ளாகி இருக்கின்றனர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


அமெரிக்கா இஸ்ரேல் ஈரான் நாடுகளுக்கிடையே நடந்து வரும் வளைகுடாப் போரால் உலகம் முழுவது பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சி மட்டுமல்ல எரிபொருள் பற்றாக்குறையால் பல நாட்டு மக்கள் அவதிக்குள்ளக்கி இருக்கின்றனர்.
பாகிஸ்தான் இலங்கை போன்ற நாடுகளில் எரிபொருள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. இந்தியாவில் சமையல் எரிவாயு பற்றாக்குறையால் மக்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் வியாபார நிறுவனங்கள் உணவாகங்களுக்கான தேவையான எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறையால் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆட்டோ போன்ற எல்.பி.ஜி கேஸ் வாகனங்களுக்கான எரிபொருள் விலையேற்றத்தால் வாடகை வாகன ஓட்டுநர்கள் மிகுந்த பொருளாதார சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். .
இந்நிலையில் கோவிட் காலத்தைப் போல” என மாண்புமிகு பிரதமர் பேசியிருப்பது பெரும் பீதியை கிளப்பியிருக்கிறது.
பிரதமர் கருத்து குறித்து தமிழக முதலமைச்சர், கோவிட் காலத்தைப் போல என பிரதமர் அவர்கள் பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.
பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தீவிர நடவடிக்கைகள் மூலம் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய ஒன்றிய பா.ஜ.க. அரசு இதில் இருந்து செய்திகளைத் திசைதிருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை script-ஐத் தற்போது கையிலெடுத்துள்ளது.
பா.ஜ.க. ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டுள்ள அ.தி.மு.க.வோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள். சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது?
மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. “இத்தனைக்கும் பொறுப்பான ஒன்றிய பா.ஜ.க. அரசு என்ன செய்கிறது?” என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி என்று இப்பிரச்னை குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


banner

Related posts

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி என்னாச்சு.? ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையை முடக்கியது யார்.? என்ன செய்கிறார்.? அபாய்குமார் சிங் ஐ.பி.எஸ்

Ambalam News

கருணாநிதியை போன்று “மூச்சு உள்ளவரை நானே தலைவர்” – பாமக நிறுவனர் ராமதாஸ்

Admin

எடப்பாடி பழனிச்சாமியுடன் மல்லுக்கட்டு – ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை.!?

Ambalam News

Leave a Comment