ஸ்பெயின் கார் பந்தயத்தில் நடிகர் அஜீத்குமார்


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜீத் குமார் , ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு படத்திற்கு பிறகு கார் ரேசில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

கார் ரேஸிங்கில் அதீத தீவிரம் காட்டி வரும் அஜித், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்தமாக யும் பந்தய நிறுவன நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது. அஜித்குமார் அடுத்ததாக ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளார். அந்த போட்டிகளின் அட்டவணை வெளியாகியுள்ளது.

அதன்படி, அதன்படி, செப்டம்பர் 27–28 – க்ரெவென்டிக் 24H, செப்டம்பர் 30– அக்டோபர் 1 – LMP3 சோதனை, அக்டோபர் 6– மஹிந்திரா பார்முலா E சோதனை, அக்டோபர் 11–12– GT4 ஐரோப்பிய தொடர், என நான்கு கார் ரேஸ் போட்டிகளில் அஜித் பங்கேற்க உள்ளார்.

அதனை தொடர்ந்து ஆசிய கார் ரேஸ் தொடரில் பங்கேற்க உள்ளதாக அஜித்குமார் ரேஸிங் அணி அறிவித்துள்ளது. அதாவது, அஜித் குமார் ரேஸிங், டீம் விரேஜுடன் இணைந்து ஆசிய லெமன்ஸ் தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார். அவ்வகையில் இன்றும் நாளையும் கிரெவென்டிக் 24எச் பந்தயத்தில் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார்.


banner

Related posts

ராபர்ட் புரூஸுக்கு எதிரான தேர்தல் வழக்கு: நயினார் நாகேந்திரனிடம்1 மணி நேரம் குறுக்கு விசாரணை

Admin

ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால் அமெரிக்க டாலர் மதிப்பு சரிந்தது.. ஜப்பானின் கரன்சியான ‘யென்’ அமெரிக்க டாலரை முந்தியது

Ambalam News

‘’சண்டை போட்டுக்காதீங்க’’.! தேர்தல் வேலைய பாருங்க.! தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா அறிவுரை..!

Ambalam News

Leave a Comment