சென்னை பாடி பகுதி R.S. ரோடு, கொரட்டூர் சென்னை-80 என்ற முகவரியில் இயங்கி வரும் இயங்கிவரும் ‘’கிரீன் சினிமாஸ்’’ நிறுவனம் (முன்பு இது ராதா திரையரங்கம்) கடந்த 2021 முதல் தற்போதைய 2025 வரை திரையரங்குக்கான அரசு உரிமத்தை புதுப்பிக்காமல் சட்ட விரோதமாக இயங்கி வருவதாக சமூக ஆர்வலர் காசிமாயன் என்பவர் போலீசில் புகாரளித்திருக்கிறார்.
சமூக ஆர்வலர், காசிமாயன் தகவல் அறியும் உரிமைச்சட்டம் வாயிலாக, TNPSC மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-II க்கான 2018 தேர்வில், 33 பேர் முறைகேடாக தேர்வு செய்யப்பட்ட விவகாரம், TNHB ஜெ.ஜெ நகர் அலுவலக பணியாளர்கள் ஒரே வீட்டின் காலிமனையை முறைகேடாக பலருக்கு விற்பனை செய்தது, எக்மோர் ரயில் நிலையத்தில் 2180 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல், அத்திவாரதர் 48 நாள் வைபவம் வரவு செலவு நடந்த குளறுபடிகள் போன்ற முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
தற்போது உரிமங்களை புதுப்பிக்காமல் அரசுக்கு வாருவாய் இழப்பை ஏற்படுத்தும் திரையரங்கு மீது புகாரளித்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.
காசிமாயன் தகவல் அறியும் உரிமச்சட்டம் வாயிலாக சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் பெற்ற தகவலின் அடிப்படையில், கிரீன் சினிமாஸ் என்ற திரையரங்கத்திற்கு உரிமம் புதுப்பிக்கபட்டவில்லை என்ற தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆவடி காவல் ஆணையராக பொது தகவல் அலுவலர் காசிமாயனுக்கு கொடுத்த பதில் மனுவை ஆதாரமாக T-3 கொரட்டூர் காவல் நிலைய ஆய்வாளரிடம் கிரீன் சினிமாஸ் நிறுவனத்தின் மீது குற்ற நடவடிக்கை எடுக்கும்படி புகாரளித்துள்ளார்.
Related posts
Click to comment