பொறுப்பு டிஜிபி நியமனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி


தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31ஆம் தேதி பணி ஓய்வு பெற்றதை அடுத்து, பொறுப்பு டிஜிபி-யாக வெங்கட்ராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்து வந்தது. இந்நிலையில், பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் வரதராஜ் என்பவர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வஸ்தவா, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
தற்காலிக அடிப்படையில், டிஜிபியை நியமிக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்தது சட்டவிரோதம் என்று வழக்கறிஞர் வரதராஜ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து தீர்ப்பு கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, டிஜிபி நியமனம் செய்யப்பட இருப்பதால், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே யு.பி.எஸ்.சி.க்கு இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளதால் நாங்கள் தலையிட விரும்பவில்லை.
டிஜிபி பொறுப்பு காலியாக இருந்த நிலையில், பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்ய செய்ய முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


banner

Related posts

முன்னாள் அதிமுக எம்,பி அன்வர்ராஜா திமுகவில் இணைந்தார் – அதிமுகவினர் அதிர்ச்சி..

Admin

இபிஎஸ் பிரச்சார வாகனத்தை முற்றுகையிட்டு, அதிமுகவை ஒன்றிணைக்க தொண்டர்கள் கோஷம்..

Ambalam News

டிஜிபி அலுவலக வாசலில் ஏர்போர்ட் மூர்த்தியை செருப்பால் அடித்து தாக்கிய மர்ம நபர்கள் – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Ambalam News

Leave a Comment