மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றி க்கழக மாநாட்டில், ஆர்வத்தில் நடிகர் விஜய்யை அருகில் பார்க்க ஆசைப்பட்ட இளைஞர் சரத்குமார் விஜய் ரேம்ப்வாக் வரும் போது, ரேம்ப்வாக் மேடையில் ஏறினார். அப்போது விஜய்யின் பவுன்சர்கள் அந்த வாலிபரை மேடையில் இருந்து ஈவு இரக்கமின்றி குண்டுக்கட்டாக தூக்கி வீசினர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அவரை தூக்கி வீசும்போது விஜய் அதை தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்து வருகிறது.
தூக்கி வீசப்பட்ட இளைஞனை ஊடகங்கள் அடையாளம் கண்டு அதுகுறித்து கேட்டபோது, அது நான் இல்லை என்று மறுத்து வந்தார். ஆனால், அந்த இளைஞனின் தாய் தூக்கி வீசப்பட்ட தனது மகனுக்காக, பேசியபோதுகூட, மேடையில் இருந்து தூக்கி வீசப்பட்டது நான் இல்லை என்று தெளிவாக சரத்குமார் கூறிவந்தார். தனது தாயாரை சிலர் வற்புறுத்தி பேச வைப்பதாகவும் குற்றம்சாட்டி வந்தார்.
இந்நிலையில், தற்போது இளைஞர் சரத்குமார் தவெக மாநாட்டில் மேடையில் இருந்து தூக்கி வீசப்பட்டது நான் தான். அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக கூறி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். இனி இது போன்று நடக்கக்கூடாது என்ற எண்ணத்தில் புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார். அவரது தாயார் தன் மகன் தாக்கப்பட்டதற்கு நீதியும், இழப்பீட்டு நிதியும் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
Related posts
Click to comment